Don't Miss!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Finance
இந்தியாவை விட இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசத்தில் பெட்ரோல் விலை குறைவு.. ஆய்வறிக்கை வெளியீடு!
- News
கனமழை வெளுத்து வாங்க போகுது! பெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்! கவனமாக இருங்க மக்களே..!
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கேரள திரையரங்குகளில் ரிலீசாகும் டாக்டர் படம்... 25ம் தேதி ரிலீஸ்!
திருவனந்தபுரம் : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள படம் டாக்டர்.
இந்தப்படம் தமிழகம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் சிறப்பான வசூலை வாரிக் குவித்துள்ளது.
Mind இல்லாதவன் mindgame பற்றி பேசுகிறார்… அபிஷேக்கை விளாசும் நெட்டிசன்ஸ் !
இந்நிலையில் தற்போது வரும் 25ம் தேதி இந்தப் படம் கேரளாவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் டாக்டர். திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மீண்டும் திரையரங்குகளுக்கு அழைத்து வந்துள்ளது. விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தை இந்தப் படம் பெற்றுத் தந்துள்ளது.

தெலுங்கிலும் வரவேற்பு
தெலுங்கிலும் வருண் டாக்டர் என்ற பெயரில் வெளியிடப்பட்டு அனைத்து தரப்பினருக்கும் லாபத்தை அள்ளித் தந்துள்ளது. இந்நிலையில் மலையாளத்தில் இந்தப் படத்தை 21ம் தேதி ரிலீஸ் செய்ய முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு கடுமையான மழை பெய்து பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

25ம் தேதி கேரளாவில் ரிலீஸ்
கேரளாவில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 25ம் தேதி கேரளாவில் டாக்டர் படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கில் வசூலை இந்தப் படம் வாரிக்குவித்துள்ள நிலையில் கேரளாவிலும் படம் டப் செய்யப்பட்டு தற்போது ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

கோடிகளில் வசூல்
கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு வீட்டிலேயே முடங்கிய மக்கள் தற்போது அதிகளவில் திரையரங்குகளில் சென்று டாக்டர் படத்தை பார்த்து வருகின்றனர். இதனால் வெளியான 9 நாட்களில் 51 கோடிகளை டாக்டர் படம் வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலும் வசூல் சாதனை
அமெரிக்காவிலும் இந்தப் படம் வசூலை வாரிக் குவித்துள்ளது. விஜய்யின் மாஸ்டர் படத்தை காட்டிலும் டாக்டர் படம் சிறப்பான வசூலை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கேரளாவில் திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வெளியாகவுள்ள முதல் பெரிய படம் இது என்பதால் அங்கும் சிறப்பா வரவேற்பு எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து தரப்பினரும் ஆதரவு
இந்தப் படத்திற்கு ரிபீட்டட் ஆடியன்ஸ் அதிகளவில் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் இந்தப் படம் கவர்ந்துள்ளது. இதனால்தான் தமிழகத்தில் அதிக வசூலை குவித்துள்ளது. இதே போல கேரளாவிலும் வசூல்மழையை படம் பொழியும் என்று எதிர்பார்க்கலாம்.