கடைசி செல்ஃபி.. வைரலாகும் மாஸ்டர் இயக்குநருடன் டாக்டர் சேது எடுத்த புகைப்படம்.. ரசிகர்கள் கண்ணீர்

சென்னை: கண்ணா லட்டு தின்ன ஆசையா பட நடிகரும் மருத்துவருமான சேதுராமன், நேற்று இரவு திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்த செய்தி தமிழ் சினிமாவையே கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது.

Recommended Video

Actor & Dr.Sethu Raman Passed Away |Santhanam | Kusboo| Arav | Athulya Condolence

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட சேதுராமன், கடைசியாக மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

தளபதி விஜய்யின் மாஸ்டர் பட இயக்குநருடன் டாக்டர் சேது எடுத்துக் கொண்ட செல்ஃபி போட்டோவை விஜய் ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

நடிப்பில் ஆர்வம்

நடிப்பில் ஆர்வம்

தோல் மருத்துவரான சேதுராமன், Zi கிளினிக்கை நடத்தி வந்தார். டாக்டர் சேதுராமனுடன் நெருங்கிய நட்புக் கொண்ட நடிகர் சந்தானம், அவரிடம் இருக்கும் நடிப்பு ஆர்வத்தை அறிந்து கொண்டு, தனது தயாரிப்பில் 2013ம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில், சேதுராமனை நடிக்க வைத்தார்.

கடைசி படம்

கடைசி படம்

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தைத் தொடர்ந்து மீண்டும் சந்தானத்துடன் இணைந்து, வாலிப ராஜா, சக்கப் போடு போடு ராஜா உள்ளிட்ட படங்களில் சேதுராமன் நடித்தார். ஆனால், அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. கடந்த ஆண்டு இறுதியில் கிருஷ்ணா சாய் இயக்கத்தில் வெளியான 50/50 படம் தான் சேதுவின் கடைசி படமாக மாறியுள்ளது.

லோகேஷ் கனகராஜுடன்

பல சினிமா பிரபலங்கள் ஏற்படும் தோல் குறித்த பிரச்சனைகளை தீர்த்து வைத்து வரும் மருத்துவர் சேதுராமன் உடன் மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை ஒரு வாரத்திற்கு முன்னதாகத் தான் சேதுராமன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

ரசிகர்கள் வருத்தம்

ரசிகர்கள் வருத்தம்

அந்த செல்ஃபி போட்டோவை சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும், நடிகர் சந்தானத்தின் ரசிகர்களும், தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். உயிரிழந்த மருத்துவருக்கு உமையாள் என்கிற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

டிபியை மாத்திய குஷ்பு

மருத்துவரும் நடிகருமான சேதுராமனின் மறைவு செய்தியைக் கேட்டு அதிர்ந்து போன நடிகை குஷ்பு, தனது ட்விட்டர் டிபியில் சேதுராமனின் புகைப்படத்தை வைத்துள்ளார். இவ்வளவு இளம் வயதில் டாக்டர் சேதுராமன் நம்மை விட்டுப் போய் விட்டார். அவரது மனைவி மற்றும் மகளுக்கு எப்படி ஆறுதல் சொல்ல போகிறேன் என கலங்கிய கண்களுடன் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X