இப்படி ஒரு அவதூறா?..அதுவும் ஒரு டாக்டரிடமிருந்து..பயில்வான் ரங்கநாதனை வெளுத்து வாங்கிய நடிகை ஷர்மிளா
சென்னை : பிரபல நடிகை, அரசியல்வாதியான டாக்டர் ஷர்மிளா ட்விட்டரில் பயில்வான் ரங்கநாதனை கண்டபடி விமர்சித்துள்ளார்.
தமிழ் தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் தோன்றி பொதுமக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் டாக்டர் ஷர்மிளா.
எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற டாக்டர் ஷர்மிளா, டாக்டர் மாத்ருபூதத்தின் புதிரா புனிதமா என்ற நிகழ்ச்சியில் மூலம் தனது தொலைக்காட்சி வாழ்க்கையை தொடங்கினார். இதையடுத்து, ஜெயா டிவியில் ஒரு வினாடி வினா நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமானார்.

டாக்டர் ஷர்மிளா
நடிகை ஷர்மிளா தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு டிவி சீரியல்கள் மற்றும் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா என்ற தொடரில் செண்பகம் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஷர்மிளா, பயில்வான் ரங்கநாதனை விமர்சனம் செய்திருந்தார்.

விமர்சித்த ஷர்மிளா
இதையடுத்து, பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப்சேனலில், ஷர்மிளா யார் என்ற ரகசியத்தை வெளியிட்டால் அவர் தாங்க மாட்டார். அவர் அறிமுகமானதே பாலியல் பற்றிய நிகழ்ச்சியைபேசித்தான். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிட் நைட்டில் ஒளிபரப்பான புதிரா புனிதமா நிகழ்ச்சியில் நீங்கள் கொஞ்சம் கூட கூச்சப்படாமல் அந்தரங்க விஷயத்தை பேசுவீர்கள்.

எந்த தகுதியும் இல்லை
அதுமட்டும் இல்லாமல் நீங்கள் மூன்று திருமணம் செய்தவர் நீங்கள் என்னை பற்றி பேச எந்த ஒரு தகுதியும் இல்லை. மேலும் நீங்களும் நானும் பல தொடர்களில் நடித்திருக்கிறோம். அப்போது என்னென்ன நடந்துச்சுனு சொல்லட்டுமா? என்றும் உங்களை பற்றி நான் சொல்வதைவிட மற்றவர்களுக்கே நன்றாக தெரியும் என, டாக்டர் ஷர்மிளாவை மிகவும் தரக்குறைவாக விமர்சித்து இருந்தார்.

கண்டபடி திட்டியுள்ள ஷர்மிளா
இதனால், டென்ஷனான ஷர்மிளா, தனது ட்விட்டரில் பயில்வான் ரங்கநாதனை கடுமையான சொற்களால் திட்டி தீர்த்துள்ளார். அதில், கண்டபடி இழிவாக பயில்வான் ரங்கநாதனை திட்டி தீர்த்துள்ளார் டாக்டர் ஷர்மிளா. .... வாந்தி எடுத்த வக்கிரத்தை எல்லாம் வேலை வெட்டி இல்லாம எடிட் பண்ணி என் TLல போட்டா..நாங்க பயந்து ஓடிடுவோமா..போங்கடா டேய் சங்கி பரிதாபங்கள்" என குறிப்பிட்டுள்ளார். ஒரு படித்த மருத்துவவரிடமிருந்து இதுபோன்ற பதிவை எதிர்ப்பார்க்காத நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











