twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Doctor Strange In The Multiverse Of Madness Box Office:இரண்டு நாளில் இத்தனை கோடி வசூலா?

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: சுமார் 1500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ் திரைப்படம் நேற்று இந்தியாவில் வெளியானது.

    இந்தியாவில் முதல் நாளில் அதிகபட்சமாக மிகப்பெரிய வசூல் வேட்டையை இந்த படம் நிகழ்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    வியாழக்கிழமையே வெளிநாடுகளில் வெளியான இந்த படத்தின் இரண்டு நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த வியப்பூட்டும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

    விஜய் ஹீரோவா? வேண்டாம் என் மகனை ஹீரோவா போடு... பிரபல தயாரிப்பாளரால் சிக்கித் தவித்த இயக்குனர்!விஜய் ஹீரோவா? வேண்டாம் என் மகனை ஹீரோவா போடு... பிரபல தயாரிப்பாளரால் சிக்கித் தவித்த இயக்குனர்!

    மேஜிக் மிரட்டல்

    மேஜிக் மிரட்டல்

    மார்வெல் திரைப்படமான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ் டைட்டிலுக்கு ஏற்பவே மல்டிவெர்ஸ் மாயாஜாலங்களை திரையில் காட்டி ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தியது. டாக்டர் ஸ்டீவர் ஸ்ட்ரேஞ்சாக இந்த படத்திலும் தனது அசாத்திய நடிப்பால் மிரட்டி இருந்தார் நடிகர் பெனடிக்ட் கம்பர்பேட்ச்.

    ஸ்கார்லெட் விட்ச்

    ஸ்கார்லெட் விட்ச்

    டாக்டர் ஸ்ட்ரேஞ்சுக்கு இந்த படத்தில் வாண்டா எனும் சூப்பர் ஹீரோயின் தான் ஸ்கார்லெட் விட்ச்சாக மாறி மிகப்பெரிய சவாலாக அமைகிறார். பல மல்டிவெர்ஸுக்கு பயணம் செய்யும் இந்த படத்தில் ட்ரீம் வாக்கிங் எனும் கான்செப்டை காட்டி உள்ளனர். கிறிஸ்டோபர் நோலனின் இன்செப்ஷன் படம் போல கனவிலேயே பயணம் செய்து பிற மல்டிவெர்ஸுக்கு போக முடியும் என்பதை காட்டி உள்ளனர்.

    இந்திய வசூல்

    இந்திய வசூல்

    நேற்று இந்தியாவில் வெளியான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படம் முதல் நாளில் அதிகபட்சமாக 32.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்தின் வசூலை டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்தால் நெருங்க முடியவில்லை. அதே சமயம் பேட்மேன் படத்தின் வசூலை பந்தாடியுள்ளது.

    கெத்துக் காட்டும் கேஜிஎஃப் 2

    கெத்துக் காட்டும் கேஜிஎஃப் 2

    மார்வெலின் பிரம்மாண்டமான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படம் வெளியாகியும் கேஜிஎஃப் 2 இந்தியாவில் வசூலித்த தொகையை முறியடிக்க முடியவில்லையே என கேஜிஎஃப் 2 ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்தியளவில் முதல் நாளிலேயே கேஜிஎஃப் 2 திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் வேட்டை ஆடி இருந்தது.

    1500 கோடி பட்ஜெட்

    1500 கோடி பட்ஜெட்

    இயக்குநர் சாம் ராய்மி இயக்கத்தில் பெனடிக்ட் கம்பர்பேட்ச், எலிசபெத் ஆல்சன், பெனடிக்ட் வாங் நடிப்பில் வெளியான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ் திரைப்படம் 1500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. 200 மில்லியன் டாலர்கள் இதன் பட்ஜெட் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    உலகளவில் எத்தனை கோடி

    உலகளவில் எத்தனை கோடி

    வியாழன் மற்றும் வெள்ளி என இரு நாளில் உலகளவில் 121.7 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்த படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய மதிப்பில் 930 கோடி ரூபாய் வசூலை இரண்டு நாட்களில் இந்த படம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வார முடிவிலேயே படத்தின் பட்ஜெட்டான 200 மில்லியன் டாலர் வசூலை முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பைடர்மேன் மற்றும் மற்ற மார்வெல் சூப்பர் ஹீரோவுக்கு இருக்கும் அளவுக்கு இந்தியாவில் டாக்டர் ஸ்ட்ரேஞ்சில் ரசிகர்கள் இல்லாதது தான் இங்கே குறைவான வசூலை இந்த படம் பெறக் காரணம் என்கின்றனர்.

    English summary
    Doctor Strange In The Multiverse Of Madness Global Box Office reports are here. But it doesn’t Beat Spiderman No Way Home collection.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X