"டாக்டர்" அடுத்த பாடலை கேட்க தயாரா? அனிருத் ட்வீட்!
சென்னை: சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் டாக்டர்.
இந்த படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ளார், ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் பாடல் குறித்த அறிவிப்பை அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

படப்பிடிப்பு நிறைவு
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து திரையரங்குகளில் வெளிவரவுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து, டப்பிங் பணிகள் முடிந்து, மார்ச் 26ம் தேதி ரிலீசுக்கு காத்துள்ளது.

டிக் டாக் தடை
இந்த படத்திலிருந்து முதலில் டிக் டாக் தடை செய்யப்பட்டதை வைத்து செல்லம்மா செல்லம்மா என்னும் பாடலை வெளியிட்டனர். சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத், ஜோனிட்டா காந்தி ஆகியோர் பாடிய இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியது.

மெலோடி பாடல்
அதைத்தொடர்ந்து டாக்டர் படக்குழு நெஞ்சமே என்னும் மெலோடி பாடலை வெளியிட்டது. மோகனின் வரிகளில் அனிருத் இந்த பாடலை பாடி இருந்தார். எதிர்பார்த்தது போலவே நெஞ்சமே பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அனிருத் ட்வீட்
டாக்டர் படம் ரிலீசுக்கு காத்துள்ள நிலையில் ரசிகர்களுக்கு அப்டேட் கொடுக்கும் வகையில் அனிருத், "டாக்டர் படத்திலிருந்து அடுத்த பாடலை கேட்க தயாரா!?" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











