twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டாக்டர் வீரபாபு,கொரோனா சமயத்தில் பெரிதும் பேசப்பட்டவர் ... குழந்தைகளுக்கான படம் இயக்கி உள்ளார்

    |

    சென்னை : நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் சிற்பி மற்றும் பழனி பாரதி இணையும் புதிய படம் முடக்கறுத்தான் . தற்போது K .வீரபாபு 'முடக்கறுத்தான் ' எனும் புதிய படத்தை இயக்கி நடிக்கிறார் .

    இப்படத்தை வயல் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்ய , சிற்பி இசையமைக்கிறார். மேலும் இப்படத்திற்கு பழனி பாரதி பாடல்களை எழுதுகிறார் .

    நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் சிற்பி மற்றும் பழனி பாரதி இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது .படத்தொகுப்பினை ஆகாஷும் , சண்டை பயிற்சியை சூப்பர் சுப்பராயனும் மேற்கொள்கிறார்கள் . கதையின் நாயகியாக மஹானா நடிக்கிறார்

    படத்திற்கு படம் கெட்அப் சேன்ஜ்... பட்டையை கிளப்பும் கார்த்தி படத்திற்கு படம் கெட்அப் சேன்ஜ்... பட்டையை கிளப்பும் கார்த்தி

    நடிகர், மருத்துவர், இயக்குனர் வீரபாபு

    சிறு வயதிலிருந்தே சினிமா மீது எனக்கு ஆர்வம் அதிகம். இந்தத் துறையிலும் சாதிக்க வேண்டும் என்று நினைத்தேன் .தற்போது அது நிஜமாகி உள்ளது .குழந்தைகளின் வாழ்க்கையை முடக்கும் கயவர்கள் பற்றிய கதைதான் முடக்கறுத்தான். நிறைய குழந்தைகள் பல்வேறு சூழ்நிலை காரணமாக சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான ஒரு அமைப்பு, திட்டம் உருவாக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. குழந்தைகளுக்கான பல பாதுகாப்பு அமைப்புகள் உள்ளது .அது இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றார் .

     உயிர்களை காப்பற்றிய மருத்துவர்

    உயிர்களை காப்பற்றிய மருத்துவர்

    இந்த கொரோனா காலத்தில் எங்கு திரும்பினாலும் உயிரிழப்பு பற்றிய செய்திகள் வந்த சமயத்தில் உயிர்களை காப்பற்றிய மருத்துவர் என்ற செய்தி கேட்டு மகிழ்ந்தேன் . ஒருநாள் வீரபாபு சந்திப்பின்போது கதையை பற்றி அவர் சொன்னார். இந்த காலகட்டத்திற்கு மிகவும் ஏற்ற ஒரு முக்கியமான கதை .அருமையாக வந்துள்ளது. குறிப்பாக சித்ரா பாடிய பாடல் ஒன்று சிறப்பாக வந்துள்ளது. பொதுவாக நடிப்பது சுலபம், பாடல் காட்சிகளிலும் சண்டை காட்சிகளிலும் நடிப்பது சிரமம். ஆனால் அதையும் சிறப்பாக வீரபாபு செய்துள்ளார் .கண்டிப்பாக அவர் ஜெயிப்பார் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறினார் .இவரை தொடர்ந்து பேசிய நடிகர் மயில்சாமி ...இந்த படத்தில் நான் ஒரு குடிகாரன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளேன். ஒரு குடிகாரனை எப்படி திருத்துவது என்ற ஒரு நுணுக்கமான முறையை சொல்லியுள்ளார் வீரபாபு என்று பெருமையாக சொன்னார் .

    தயாரிப்பாளர் அழகன் தமிழ் மணி

    தயாரிப்பாளர் அழகன் தமிழ் மணி

    நானும் வீரபாபுவும் 20 வருட நண்பர்கள். இந்த கொரோனா காலகட்டத்தில் பல மக்களின் உயிரை காப்பாற்றிய வீரபாபு இந்த படத்தை நீங்கள் தான் தயாரிக்க வேண்டும் என என்னிடம் கூறினார். அதனால் எனது வயல் மூவிஸ் நிறுவனம் சார்பில் படத்தை தயாரித்து இருக்கிறேன். இப்படத்தில் என்னையும் நடிக்க வைத்துள்ளார். தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் .'

     கண்டிக்கும் விதமாக

    கண்டிக்கும் விதமாக

    இந்த கொரோனா காலகட்டத்தில் பல உயிர்களை காப்பாற்றியவர் வீரபாபு ,மனித நேயம் மிக்கவர். குழந்தை கடத்தல் என்பது இன்று பயங்கரவாதமாக உள்ளது .குழந்தைகள் பிச்சை எடுப்பதற்காக பயன்படுத்தப்படுகிறார்கள். அதனை கண்டிக்கும் விதமாக சிறந்த கதையை வீரபாபு இயக்கியுள்ளார். இந்த படத்தில் வரும் நான்கு பாடல்களும் பேசப்படும் பாடல்களாக அமையும் என்பது உண்மை. இப்படத்தில் நான்கு பாடல்களில் இரண்டு பாடல்களை கேட்டால் கண்களில் நீர் கசியும் என்று பாடலாசிரியர் பழனி பாரதி கூறினார் .

    குறும்புக்கார பெண்ணாக

    குறும்புக்கார பெண்ணாக

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்திரிக்கை நண்பர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த திரைப்படத்தில் நான் ஒரு குறும்புக்கார கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளேன். இப்படத்தில் 4 பாடல்கள் உள்ளது. வீரபாபு சிங்கிள் டேக்கில் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார் குழந்தைகளுக்கு இப்படம் மிகவும் பிடிக்கும் என்று படத்தின் கதாநாயகி மஹானா பேசினார் . பரமக்குடியை பூர்வீமாக கொண்ட இந்த கதாநாயகிக்கு நிறைய படங்கள், பல புது இயக்குனர்கள் புது கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்வார்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்தனர் .

      English summary
      Siddha Doctor Veerababu has directed and acted in the movie Mudakkaruttan.
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X