உங்களால் இனி டான்ஸ் ஆடவே முடியாது: நடனப் புயலிடம் தெரிவித்த டாக்டர்கள்
மும்பை: இனிமேல் உங்களால் டான்ஸ் ஆட முடியாது என்று மருத்துவர்கள் தன்னிடம் கூறியதாக பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் இரண்டு விஷயத்திற்காக ரசிகர்கள், குறிப்பாக ரசிகைகளிடம் மிகவும் பிரபலம். ஒன்று எக்கச்சக்க அழகு, இரண்டு நடனம் ஆடும் திறன். அவர் சாதாரண ஸ்டெப்ஸை கூட அசத்தலாக போடுவார்.
அவர் டான்ஸ் ஆடினால் அனைவரும் வைத்த கண் வாங்காமல் பார்ப்பார்கள். பிரபல நடிகர்களே ரித்திக் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாக தெரிவித்தது உண்டு.

ரித்திக்
உங்களால் இனிமேல் டான்ஸ் ஆடவே முடியாது என்று மருத்துவர்கள் ஒரு முறை என்னிடம் தெரிவித்தனர். நான் அந்த கட்டத்தையும் தாண்டி வந்துவிட்டேன். ஃபிட்டாக இருப்பதற்கு டான்ஸ் ஆடுவது சிறந்த வழி என்று ரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.

சந்தோஷம்
டான்ஸ் ஆடுவதால் கலோரிகளை குறைக்கலாம், தசைகள் வலுப்பெறும், மகிழ்ச்சியாக இருக்கலாம். என் அம்மா, மகன்களுக்கும் டான்ஸ் ஆட கற்றுக் கொடுத்துள்ளேன். அவர்களுக்கும் என்னை போன்றே டான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும் என்கிறார் ரித்திக்.

தூம்
நான் ஆடிய அனைத்து பாடல்களுமே எனக்கு பிடிக்கும். அதில் பிடித்தது என்றால் தேவஸ்ரீ கணேஷா, தூம் அகெய்ன், பேங் பேங், ஏக் பல் கா ஜீனா ஆகியவை மிகவும் பிடிக்கும் என்று ரித்திக் ரோஷன் கூறியுள்ளார்.

பாலிவுட்
ரித்திக் ரோஷன் சூப்பர் 30 என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். அது கணக்கு புலியான ஆனந்த் குமாரின் வாழ்க்கை வரலாற்று படம். அது தவிர அவர் டைகர் ஷ்கராஃபுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். டைகருக்கு ரித்திக் தான் ரோல் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











