இசைக்காதலர் எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு அவரது பாடல்களை வைத்தே சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்!

சென்னை: இசைக் காதலரான எஸ் பி பாலசுப்பிரமணியத்திற்கு அவர் பாடிய பாடல்களை ஒலிக்க செய்து மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.

Recommended Video

SPB Current Status in Hospital • SP Charan

பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த 5ஆம் தேதி கொரேனா தொற்று காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

மூச்சுத் திணறல் ஏற்பட்ட எஸ்பி பாலசுப்ரமணியம் ஐசியூவுக்கு மாற்றப்பட்டு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையின் இந்த அறிக்கை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரசிகர்கள் பிரார்த்தனை

ரசிகர்கள் பிரார்த்தனை

இதனை தொடர்ந்து ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறை பிரபலங்களும் எஸ்பி பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தித்து வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள எஸ்பி பாலசுப்ரமணியத்தின் ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

எஸ்பி சரண் வீடியோ

எஸ்பி சரண் வீடியோ

இதனை தொடர்ந்து அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகனான எஸ்பிபி சரண் தெரிவித்தார். தொடர்ந்து எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரது மகனான எஸ்பிபி சரண் அவ்வப்போது வீடியோக்களையும் வெளியிட்டு தெரியப்படுத்தி வருகிறார்.

பாடல்கள் மூலம் சிகிச்சை

பாடல்கள் மூலம் சிகிச்சை

எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு என மருத்துவமனையில் பிரத்யோக அறை அமைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு அவரது பாடல்கள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

அறையில் ஒலிக்கும் பாடல்கள்

அறையில் ஒலிக்கும் பாடல்கள்

வென்டிலேட்டரில் உள்ள எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு அவர் பாடிய காதல் பாடல்கள், பக்தி பாடல்கள், மெல்லிசை பாடல்கள் என அவர் சிகிச்சை பெறும் அறையில் ஒலிக்கவைக்கப்படுகின்றன. இதன் மூலமாக அவரின் மன அழுத்ததை குறைத்து கான்சியஸ் அளவை உயர்த்தலாம் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

மன அழுத்தத்தில் இருக்கும் பலருக்கும் அவரது குரலில் ஒலித்த பாடல்கள் மருந்தாக இருந்து வருகிறது. தூக்கம் வராமல் தவிக்கும் பலர், இன்றும் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் இனிமையான குரலில் ஒலித்த பல பாடல்கள்தன் இதமளித்து வருகிறது.

இசை நன்றிக்கடன்

இசை நன்றிக்கடன்

இந்நிலையில் இசைக் காதலரான எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு அவரது பாடல்களை கொண்டே சிகிச்சையளிக்கும் முறையை கையில் எடுத்துள்ளனர். பலரின் மன காயங்களுக்கும் வேதனைக்கும் மருந்தாக உள்ள எஸ்பி பாலசுப்ரமணியத்தின் பாடல்கள் அவருக்கே மருந்தாக அமைந்திருப்பது இசையே அவருக்கு நன்றிக்கடன் செய்வதாக உள்ளது என்கின்றனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X