சினிமா ஆர்வத்தால்.. மருத்துவத் தொழிலை விட்டுப் போனவர்கள்

சென்னை: சினிமா என்பது ஒரு அழகான பொழுதுபோக்கு என்பது நமக்கு மட்டும்தான்.சினிமா என்பது பலருக்கு வாழ்க்கையாகவும்,கனவாகவும் இருந்து வருகிறது. அப்படி பட்ட சினிமா பலருக்கு பெரும் மோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி சினிமாவின் மீது கொண்ட மோகத்தில் தாங்கள் செய்து கொண்டிருந்த டாக்டர் தொழிலை விட்டவர்களை பற்றி பார்ப்போம்.

doctors turn actors

அஜ்மல். இவர் கோ,அமீர் போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்திருப்பார். இவர் தனது டாக்டர் படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் நடிக்க விருப்பம் இருந்ததால் தனது டாக்டர் தொழிலை பார்ட் டைம் ஆக மாற்றி விட்டு சினிமாவில் முழு நேரம் இருந்து வருகிறார்.

doctors turn actors

உன்னை போல் ஒருவன் திரைப்படத்தில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக வந்த பரத் ரெட்டி ராம், கார்டியாலஜி முடித்தவர், அதுமட்டுமின்றி ஹைதராபாத்தில் ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்துள்ளார்.அவர் தற்போது டாக்டர் தொழிலை பார்ட் டைம் ஆக வைத்துக் கொண்டு படத்தில் முழுநேரமாக நடிக்க ஆரம்பித்து வருகிறார்.

doctors turn actors

சாய் பல்லவி. பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலர் டீச்சராக அறிமுகமாகி மலையாளம் மட்டுமில்லாமல் தமிழிலும் பிரபலமானார். இவர் 2016ஆம் ஆண்டு டாக்டர் படிப்பை முடித்தவர். பின் நடிப்பின் மீது கொண்ட ஆசையால் மற்றும் ரசிகர்களின் வரவேற்பினால் டாக்டர் தொழிலை விட்டு தற்போது முழு நேரமாக சினிமாவில் ஈடுபட்டுள்ளார்.

doctors turn actors

கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படம் மூலம் பிரபலமாகிய இவர் சொந்தமாக ஸ்கின் கிளினிக் வைத்து நடத்தியுள்ளார்.பின் சினிமா மீது ஆர்வம் கொண்டதால் டாக்டர் தொழிலை பார்ட் டைம் ஆக வைத்துக் கொண்டு படத்தில் முழுநேரமாக நடிக்க தொடங்கினார். ஆனால் சிறிது நாட்கள் முன்னர் சேதுராமன் காலமானார். இது சந்தானம் போன்ற அவரின் நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கும் பெரும் இழப்பாக இருந்தது.

இது போல் பல நடிகர்கள் தங்களின் தொழிலை விட்டு சினிமாவில் நடித்துள்ளனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X