twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாஜகவை விமர்சிக்க தயங்குவது ஏன்? - கமலுக்கு ஆவணப்பட இயக்குநர் கேள்வி!

    By Shankar
    |

    கடந்த ஆண்டு தமிழக விவசாயிகள் கொத்து கொத்தாக வறட்சிக்கு பலியானதை உருக்கமாக பேசும் படம் கொலை விளையும் நிலம். பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி எழுதி இயக்கி இருக்கிறார். தஞ்சை டெல்டா பகுதிகளுக்கே சென்று 15 நாட்கள் தங்கி விவசாயத்துக்கு நேரந்துவரும் அவலங்களைப் படம் பிடித்து வந்திருக்கிறார்.

    முன்பே ஒருமுறை திரையிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொதுமக்கள் பார்வைக்கு யுட்யுபில் வெளியிடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

    Docu movie director's question to Kamal Haasan

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர, அற்புதம் அம்மாள், போராளி வளர்மதி, இயக்குநர் சுப்ரமணிய சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாலபாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் ஆவணப்படத்தை இயக்கிய க. ராஜீவ் காந்தி ஒரு அதிர்ச்சி தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

    "ட்விட்டர் மூலமாக அரசியல் செய்துவரும் நடிகர் கமல் ஹாஸனிடம் இந்த பட ரிலீஸுக்கு வருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. அவர் படத்தைப் பார்க்க வேண்டும் என்று கேட்டார். அவரது மேனேஜர் மூலமாக படம் தரப்பட்டது. எந்த பதிலும் வரவில்லை. மேனேஜரிடம் கேட்டதற்கு 'படத்தைப் பார்த்துட்டு அவர் எதுவுமே சொல்லவில்லை' என்று சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் கமலுக்கு நெருக்கமானவர்கள் இதில் மாநில அரசை மட்டுமல்லாமல் மத்திய அரசையும் விமர்சித்திருக்கிறீர்கள். அதனால் அவர் இதை விரும்ப மாட்டார். சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கினால் வருவார், என்றார்கள். நான் அதனை நீக்க முடியாது என்று சொல்லிவிட்டேன்," என்றார்.

    கமல் காவி பயங்கரவாதத்தை எதிர்க்கிறேன் என்று சொன்னாலும் திராவிட கட்சிகளை எதிர்க்கும் அளவுக்கு பாஜகவை விமர்சிப்பதில்லை. ஏன் இந்த நிலைப்பாடு?," என்றார் ராஜிவ்.

    நேற்று வெளியிடப்பட்ட கொலை விளையும் நிலம் ஆவணப்படத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பார்த்து பாராட்டி தனது ட்விட்டரில் பகிர்ந்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Documentary movie Kolai Vilaiyum Nilam director Rajiv Gandhi has questioned Kamal Haasan for not forcefully criticising BJP govt
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X