twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆவணப்பட இயக்குநர் அருண்மொழி மாரடைப்பால் காலமானார் , பலரும் அஞ்சலி செலுத்துகிறார்கள்

    |

    சென்னை : அருண்மொழி - தமிழ்க் குறும்பட வரலாற்றில் தனித்துவம் மிக்கது இவரது பங்களிப்பு. பண்ணையார்கள், அரவாணிகள், கலை இலக்கிய ஆளுமைகள் பற்றிய இவரது பதிவுகள் மிக முக்கியமானதாகும்.

    தற்போது 49 வயதாகும் அருண்மொழி, சிறந்த தமிழ்த்திரைப்பட இயக்குநர்களின் வரிசையில் தவிர்க்க முடியாதவர். இன்றும் திரைப்படத்திற்கு இலக்கணமாகச் சொல்லப்படும் ருத்ரைய்யாவின் 'அவள் அப்படித்தான்' (1979) திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். 1986இல் 'காணிநிலம்' எனும் முழுநீளத் திரைப்படத்தை இயக்கினார். இப்படம், இலண்டன், ஜெர்மனி திரைப்பட விழாக்களில் பங்கேற்றன. 1989இல் 'ஏர்முனை' எனும் திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் நாசர் ஹீரோவாக நடித்திருந்தார். உரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதைச் சொல்லும் படம் இது.

    Documentary film maker Arunmozhi expired.

    அருண்மொழியின் ஆவணப் படங்கள்...

    நிலமோசடி : 1985இல் வெளிவந்த இந்த ஆவணப்படந்தான் பண்ணையார்களைப் பற்றி தமிழில் வெளிவந்த முதல் விவரணப்படமாகும். வடபாதி மங்கலம் தியாகராச முதலியார், சௌகத் அலி, வலிவலம் தேசிகர், ஜி.கே.மூப்பனார் உள்ளிட்ட பண்ணையார்களின் பல வழக்குகளை பற்றிய ஆவணப்படம் இது .
    மூப்பனாரை எதிர்த்துப் போட்டியிட்ட வலம்புரிஜான் இப்படத்தை தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார் அந்த சமயத்தில். 55நிமிட படமிது.

    பண்ணை வேலையார் 'சோடாமாணிக்கம்', காத்தமுத்து எம்.பி ஆகியோரின் நேர்காணல்கள் இதில் உண்டு. பொதுவுடை இயக்கத் தோழர்கள் பி.மாணிக்கம், சி.மகேந்திரன், ஆகியோரின் தூண்டுதலில் இப்படத்தை எடுத்துள்ளார் அருண்மொழி. கலை இலக்கியப் பெருமன்றம் இப்படத்தை தயாரித்தது. டெல்லி திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது.

    Documentary film maker Arunmozhi expired.

    இசைவானில் இன்னொன்று...
    இளையராஜாவைப் பற்றிய இந்த விவரணப்படம் 1992இல் எடுக்கப்பட்டது. 80 நிமிடப்படம். ஜேசுதாஸ், செம்மஞ்குடி சீனிவாச ஐயர், கமல், சிவாஜி, மம்முட்டி எனப் பலரது நேர்காணல்கள் இதில் உள்ளன.

    திருநங்கைகள் (அரவாணிகள்) பற்றிய விவரணப் படங்கள் :
    வேறெந்த குறும்பட இயக்குநர்களை விடவும் திருநங்கைகள் பற்றி நிறைய பதிவு செய்திருப்பவர் அருண்மொழி.இந்த படத்தில் இதெற்காக பல ஆண்டுகள் மெனக்கெட்டு வேலை செய்தார்.

    மூன்றாவது இனம் :
    2003 இல் வெளிவந்த இந்தப்படம் கோயம்புத்தூர் திருநங்கைகளைப் பற்றியது. முஸ்லீம்கள் வீட்டு விழாக்களில் திருநங்கைகள் கலந்து கொள்வது இதில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

    அருணா - 2004 இல் வெளிவந்தது. அருணா எனும் திருநங்கை NGO வில் பணிபுரிகிறார். திருநங்கைகள் பிச்சையெடுக்கக் கூடாது. விபச்சாரம் செய்யக் கூடாது, என்கிறார் இவர். இவரது விரிவான நேர்காணல் இப்படத்தில் உள்ளது. திருநங்கைகள் சமூகத்திற்குள் சாதி மதம் கிடையாது என்பதை இவரது நேர்காணல் உணர்த்துகிறது. இவரது வளர்ப்பு மகள் மதுரை திவ்யா (சரவணனாக இருந்து திவ்யாவானவர்) M.Phil படித்துள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்ததாகும்.

    நூரியின் கதை : 2003இல் வெளிவந்தது. நூர்முகம்மதுவாக இருந்தவர் 'நூரி'யானார். அவரைப்பற்றிய ஆவணப்படம் இது. நூரியிடம் பிரீதம்சக்ரவர்த்தி பேட்டி காண்கிறார். பிறகு அவரே நூரியாகவும் இதில் நடித்துள்ளார். நூரி நிறைய பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானவர். பலரால் ஏமாற்றப் பட்டிருக்கிறார். 15 திருமணங்கள் செய்து கொண்டிருக்கிறார். பிராமண சமூகத்தைச் சார்ந்த 'ஆஷா பாரதி' எனும் திருநங்கை, இஸ்லாம் சமூகத்தை சார்ந்த நூரியின் வளர்ப்பு மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் சாதி, மதம் இல்லை என்பதற்கு இதுவே சிறந்த சான்றாகும்.

    'இரண்டாம் பிறவி' (1998) 'கூடவாகம்' (2004), நிர்வான் (2006) ஆகிய விவரணப்படங்களிலும் திருநங்கைகளைப் பற்றியே எடுத்திருக்கிறார்.

    பெண்கள் பூப்பெய்தும்போது தீட்டு என்று ஒதுக்கி வைக்கப்படுவதைப் பற்றி 'தோழி' எனும் குறும்படத்தையும் இயக்கியுள்ளார்.

    Beware of commissions : 1998 இல் திருநெல்வேலியில் தாமிரபரணியில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் காவல் துறையினரால் தாக்கப்பட்டும் ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டும் 17 பேர் கொல்லப்பட்டனர். இதனை அம்பலப்படுத்தியது. ஆர்.ஆர்.சீனிவாசனின் 'ஒரு நதியின் மரணம்' ஆவணப்படம் இப்படுகொலையை விசாரிக்க நியமிக்கப்பட்டது நீதிபதி மோகன் கமிஷன், அந்த கமிஷன் கொடுத்த முரணான பொய்யான செய்திகளை அம்பலப் படுத்தும் ஆவணப்படம் பீ வேர் ஆப் கமிஷன்ஸ் .

    வங்கிகளிலும் கந்து வட்டிக்காரர்களிடமும் கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கூட கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளைப் பற்றியும் 'விடியல் வரும்' (45 நிமிடம் ) எனும் குறும்படத்தை 2005 இல் இயக்கியுள்ளார். அத்துடன் 'Key Maker ' , சிறுதுளி ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். வல்லிக் கண்ணன் இன்குலாப், ராஜம் கிருஷ்ணன் போன்ற தமிழின் முக்கிய ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படங்களாக எடுத்துக் கொண்டுயிருந்தார் இயக்குநர் அருண்மொழி.

    இயக்குநர்கள் ஹரிகரன், லெனின் பாரதி, வசந்த் ஆகியோர் காலையிலேயே இயக்குநர் அருண்மொழிக்கு இறுதி மரியாதை செலுத்த வந்து விட்டார்கள். இன்னும் பல நடிகர்களும் இயக்குனர்களும் வர இருக்கிறார்கள்.
    பல ஆவன படங்கள் எடுத்த திறமைசாலி நம்முடன் இல்லை ஆனால் அவர் இந்த சமுதாயத்துக்கு கொடுத்த பதிவுகள் நீண்ட காலம் இருக்கும் , என்றும் அழியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. விஸ்.காம் படிக்கும் பல மாணவர்களுக்கு இவர் ஒரு மிக சிறந்து எடுத்துக்காட்டு . நம்பர் 1, ஜெர்னலிஸ்ட் காலனி , ஸ்ரீனிவாசபுரம் திருவான்மியூர் சென்னை 41 என்ற முகவரி தான் இவருடையது . பல மாணவர்கள் அங்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். மாணவர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இன்னும் சிறிது காலம் இருந்திருக்கலாம்.

    English summary
    Arunmozhi is one of the popular documentary film maker who expired suddenly because of cardiac arrest. many students and film celebrities visit and console his family members.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X