பீஸ்ட் படத்தில் விஜய்யின் அந்த சூப்பர் ஹிட் பாடல் இடம்பெறுகிறதா?

சென்னை : இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட்

இயக்குனர் செல்வராகவன் இந்த படத்தில் வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது

பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய்யின் சூப்பர் ஹிட் பாடல் ஒன்று ரீமேக் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பீஸ்ட்

பீஸ்ட்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மேலும் விஜய்க்கு கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக ஐந்து மொழிகளில் வெளியாகி பெரும் வசூலை வாரி குவித்த நிலையில் விஜய் திரைப்படங்கள் இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வரும் நிலையில் இப்பொழுது அடுத்ததாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது

இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது

கோலமாவு கோகிலா வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் சிவகார்த்திகேயனின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த படம் வசூலை வாரி குவித்துள்ளது. இந்த நிலையில் நெல்சன் மற்றும் விஜய் முதல் முறையாக இணைந்துள்ள பீஸ்ட் படத்தை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். ஜார்ஜியா, சென்னை மற்றும் டெல்லி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது .

செல்வராகவன் வில்லனாக

செல்வராகவன் வில்லனாக

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை பூஜா ஹெக்டே தமிழுக்கு பீஸ்ட் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். இதுவரை இயக்குனராக அனைவருக்கும் பரிச்சயமான செல்வராகவன் இப்பொழுது நடிகராக அவதாரம் எடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் இந்த படத்தில் செல்வராகவன் வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

அர்ஜுனரு வில்லு பாடல் ரீமேக்

அர்ஜுனரு வில்லு பாடல் ரீமேக்

சன் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பில் அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தில் விஜய்யின் பிரபல சூப்பர் ஹிட் பாடல் ஒன்று ரீமேக் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மாஸ்டர் படத்தில் கில்லி படத்தில் இடம்பெற்ற கபடி கபடி பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அதே பாணியில் பீஸ்ட் படத்தில் விஜய்யின் கில்லி படத்தில் இடம்பெற்ற அர்ஜுனரு வில்லு பாடல் ரீமேக் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் ஏப்ரலுக்கு பீஸ்ட் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கின்ற நிலையில் பொங்கலுக்கு ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X