அசுரன் தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம்... வைரலாகும் புகைப்படம்.. பெரும் சர்ச்சை!
நடிகர் தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்கப்பட்டு இருப்பதால் பெரிய சர்ச்சை எழுந்துள்ளது .
சென்னை: நடிகர் தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்கப்பட்டு இருப்பதால் பெரிய சர்ச்சை எழுந்துள்ளது .
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அசுரன் படம் வெளியாகி உள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்த படம் வெளியாகி உள்ளது.
இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். நெட்டிசன்கள் பலர் படத்தை பாராட்டி வருகிறார்கள். முதல்காட்சி பார்த்த விமர்சகர்கள் எல்லோரும் நன்றாகவே விமர்சனம் செய்து வருகின்றனர்.

இளைய சூப்பர் ஸ்டார் பட்டம்
இந்த நிலையில் நடிகர் தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்கப்பட்டு இருப்பதால் பெரிய சர்ச்சை எழுந்துள்ளது . தனுஷ் பொதுவாக ரஜினியின் சாயலை அதிகம் பின்பற்ற கூடியவர். தொடக்க காலத்தில் ரஜினியை பார்த்து அவரைப்போலவே நடித்தவர்தான் தனுஷ்.

ரஜினிகாந்த்
ஆனால் போக போக அப்படிப்பட்ட நடிப்பை கைவிட்டு தனக்கு என்று பாணியை அமைத்துக் கொண்டார். இவர்தான் அடுத்த ரஜினி என்று தொடக்க காலத்தில் பலர் பேசினார்கள். ஆனால் தனுஷ் அதை எல்லாம் பெரிதாக காதில் போட்டுக்கொள்ளவில்லை.

அசுரன் படம்
இந்த நிலையில்தான் தனுஷின் அசுரன் படம் வெளியாகி உள்ள தியேட்டர் ஒன்றில் அவரின் பெயருக்கு முன் இளைய சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த புகைப்படம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்பு எப்படி
தற்போது நடிகர் சிம்பு யங் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்துவிட்டார்கள். யார் இந்த வேலையை பார்த்தது என்று பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.

பிரபல திரையரங்கம்
இந்த நிலையில் இது தொடர்பாக பிரபல திரையரங்கம் ஒன்று விளக்கம் கொடுத்துள்ளது. அதில், தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுக்கப்படவில்லை. அது மாஷ் அப் வீடியோ. படத்திற்கு முன்பாக அந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இது ரசிகர்களால் செய்யப்பட்ட வீடியோ.
டைட்டில் கார்ட் விளக்கம்
அதில்தான் இப்படி இளைய சூப்பர் ஸ்டார் என்று இருக்கிறது. ஆனால் படத்தின் உண்மையான டைட்டில் கார்டில் அப்படி எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. இதனால் காலையில் இருந்து நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











