காதலரை ரகசிய திருமணம் செய்த இலியானா: சாட்சி இதோ...
மும்பை: நடிகை இலியானாவுக்கு ரகசிய திருமணம் நடந்துள்ளது போன்று.
டோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆன்ட்ரூ நீபோனை காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.
பிற நடிகைகள் போன்று அவர் தனது காதலை மறைத்து வைக்கவில்லை.

திருமணம்
இலியானாவுக்கும், ஆன்ட்ரூவுக்கும் ரகசியமாக திருமணமாகிவிட்டதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் இலியானா போட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் அது வதந்தி அல்ல உண்மை என்பதை உறுதி செய்துள்ளது.
கணவர்
கிறிஸ்துமஸ் மரத்திற்கு அருகில் நிற்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் இலியானா. புகைப்படத்தை எடுத்தது கணவர் என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.

ஆன்ட்ரூ
திருமணமும், லிவ் இன் ரிலேஷன்ஷிப்பும் வேறு வேறு என்று நான் நினைக்கவில்லை. ஒரு பேப்பர் தான் வித்தியாசம். ஆன்ட்ரூ மீதான என் காதல் ஒருபோதும் மாறாது என்று இலியானா அண்மையில் தெரிவித்தார்.

பாத்ஷாஹோ
பர்ஃபி, ரஸ்தம் உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்த இலியானா கடைசியாக நடித்த படம் பாத்ஷாஹோ. இலியானா தொடர்ந்து நடிப்பாரா இல்லையா என்பது தெரியவில்லை.

அனுஷ்கா
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் இத்தாலியில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதையே பலர் வியப்புடன் பார்த்தனர். இங்கு என்னவென்றால் இலியானாவும் ரகசிய திருமணம் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











