விஜய்யை 'அரசியல் தளபதி'யாக்கப் பார்க்கிறாரா கமல்?
சென்னை: உலக நாயகன் கமல் ஹாஸன் விஜய்யை அரசியல் தளபதியாக்கிப் பார்க்க விரும்புகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசியல், பிக் பாஸ், சினிமா என்று படுபிசியாக இருக்கும் உலக நாயகன் கமல் ஹாஸன் ட்விட்டரில் தனது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அதில் அவர் தளபதி விஜய் பற்றி கூறிய பதில் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விஜய்
விஜய் அரசியலுக்கு வர வேண்டும், தமிழக முதல்வர் ஆக வேண்டும் என்பது அவரின் ரசிகர்களின் விருப்பம். விஜய்யின் பிறந்தநாளுக்கு போஸ்டர் அடிக்கும்போது எல்லாம் வருங்கால முதல்வர் என்ற வாசகத்தை மறக்காமல் சேர்த்துவிடுகிறார்கள் ரசிகர்கள்.

எஸ்.ஏ.சி.
விஜய் நாட்டின் முக்கிய நபர்களில் ஒருவராக வேண்டும் என்று அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரும் விரும்புகிறார். விஜய் முதல்வராக வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் ஆசைப்படுவதில் தவறு இல்லை என்கிறார் எஸ்.ஏ.சி.
கமல்
விஜய் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் வரவேற்பேன். விஜய் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டும் அல்ல அனைவருக்குமே பிடித்த தம்பி என்று கமல் ட்வீட்டியுள்ளார்.

கட்சி
விஜய்யை அரசியலுக்கு அழைத்து வந்து தனது கட்சியில் சேர்க்கப் பார்க்கிறாரா கமல், தன் தளபதியாக்கிக் கொள்ள விரும்புகிறாரோ என்றெல்லாம் நெட்டிசன்கள் பேசத் துவங்கிவிட்டனர்.
நல்லது
விஜய் உடனே அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் பலர் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு விஜய் அரசியலுக்கு வராமல் இருப்பது நல்லது என்று ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











