»   »  சும்மா இருந்த அனுஷ்கா ரசிகர்களை ரூம் போட்டு யோசிக்க வைத்த கோஹ்லி

சும்மா இருந்த அனுஷ்கா ரசிகர்களை ரூம் போட்டு யோசிக்க வைத்த கோஹ்லி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கோஹ்லி எதுவும் பேசாமல் கண்ணால் பேசும் வீடியோவை வெளியிட்டது அவரது காதலி அனுஷ்கா பற்றி கூறத் தான் என்று ரசிகர்கள் ட்விட்டரில் கேள்வி தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு திருமண பிரச்சனையால் பிரிந்து பின்னர் மீண்டும் ஒன்று சேர்ந்தார்கள்.

விரைவில் திருமணம் செய்ய விரும்புகிறார் கோஹ்லி.

அனுஷ்கா

அனுஷ்கா

கோஹ்லி திருமணத்திற்கு அவசரப்பட்டாலும் அனுஷ்கா அதை பற்றி கண்டுகொள்வதே இல்லை. திருமணத்திற்கு தற்போது என்ன அவசரம் என்று கோஹ்லியின் காதில் புகை வரும்படி பேசி வருகிறார்.

கோஹ்லி

கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியில் ஒவ்வொருத்தராக திருமணம் செய்து வருகிறார்கள். யுவராஜ் சிங் கூட தனது காதலியை மணந்து கொண்டார். ஆனால் பாவம் கோஹ்லி தான் என்ன முயற்சி செய்தாலும் நடக்க மாட்டேன் என்கிறது.

வீடியோ

கோஹ்லி, அனுஷ்கா திருமணம் எப்பொழுது என்று தெரியாமல் உள்ள நிலையில் கோஹ்லி ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். உலகிற்கு ஒன்றை சொல்ல நினைத்து முடியாதபோது என வீடியோவுடன் தெரிவித்துள்ளார் கோஹ்லி. அனுஷ்காவுடனான திருமண நிச்சயதார்த்தம் பற்றி தான் பேசுகிறார் என்கிறார்கள் ரசிகர்கள்.

பாலிவுட்

பாலிவுட்

அனுஷ்கா தனது படங்களில் ரொம்பவே பிசியாக உள்ளார். நேரம் கிடைக்கும்போது கோஹ்லியுடன் எங்காவது சென்று ஓய்வு எடுத்துவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tweeples think that cricketer Kohli is trying to tell the world about his engagement with actress Anushka Sharma throught the cryptic tweet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil