யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா?... நாளை தெரியும்!

கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபுவின் காதலை நயன்தாரா ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது நாளை தெரியும்.

Recommended Video

யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா?- வீடியோ

சென்னை: நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா திரைப்படம் நாளை வெளியாகிறது.

நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கோலமாவு கோகிலா. அறிமுக இயக்குனர் நெல்சன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

Does Nayanthara accept Yogi Babus proposal?

காமெடி நடிகர் யோகிபாபு இப்படத்தில் நயன்தாராவை காதலிக்கும் வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்காக அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதிய 'எனக்கு கல்யாண வயசு தான் வந்துடுச்சுடி' பாடல் ஏற்கனவே செம ஹிட்டாகியுள்ளது.

யோகிபாவுவின் காதலை நயன்தாரா ஏற்றாரா இல்லையா என்று இணைய தளங்களில் விவாதங்கள் நடந்தன. இந்த பாடல் வைரலானதால், படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Does Nayanthara accept Yogi Babus proposal?

'யோகி பாபுவின் காதலை நயன்தாரா ஏற்றுக் கொள்கிறாரா?' என்ற கேள்வி பல இடங்களிலும் கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கான விடையை அறிய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள்.

இந்நிலையில் கோலமாவு கோகிலா திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. ரசிகர்களின் சார்பாக படத்தின் இயக்குனர் நெல்சனிடம் கேள்விக்கான விடையை கேட்டபோது, "இதுதான் நான் 'கல்யாண வயசு' பாடலில் இருந்து வெட்ட வேண்டிய ஒரே விஷயமாக இருந்தது. இல்லையென்றால் இப்போது உங்களுக்கு உள்ள அந்த ஆர்வம் இருந்திருக்காது. திரையரங்குகளுக்கு வந்து நயன்தாரா யோகிபாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்" என்றார்.

கோலமாவு கோகிலா படம் எதை பற்றியது என இயக்குனர் நெல்சன் ஓரிரு வார்த்தைகளில் கூறும்போது, "கோலமாவு கோகிலாவில் நீங்கள் தீவிரத்தை, குடும்ப உறவுகளை உணரலாம். பழிவாங்கலில் சேர்ந்து கொள்வீர்கள், விழுந்து விழுந்து சிரிக்கும் தருணங்களில் அனுபவிப்பீர்கள், படம் உங்களை சீட்டின் நுனிக்கும் இழுத்து செல்லும்" என்றார்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்த கோலாமாவு கோகிலா படத்தை நெல்சன் இயக்கியிருக்கிறார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார். நிர்மல் எடிட்டிங் செய்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X