பேட்ட படத்தின் கதை இது தானா?

By Siva

Recommended Video

பேட்ட படத்தின் கதை | ரசிகர்கள் செய்த வேலை | சசிகுமாரின் கதாபாத்திரம்- வீடியோ

சென்னை: பேட்ட படம் ஆணவக் கொலை பற்றி பேசுவதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. ரஜினி கல்லூரி வார்டனாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகின.

மதுரையில் நடக்கும் கதை என்றும் கூறப்பட்டது.

காட்சிகள்

காட்சிகள்

வட இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் படப்பிடிப்பு நடந்தது. ரஜினி ஒரு விடுதி வார்டன், ஆனால் வெளியான புகைப்படங்கள் சிலவற்றில் டான் போன்று தெரிகிறாரே. ஒரு வேளை பாட்ஷா போன்ற கதையாக இருக்குமோ என்று ரசிகர்கள் நினைத்தனர். இந்நிலையில் புது பேச்சு கிளம்பியுள்ளது.

பேட்ட

பேட்ட

பேட்ட படம் ஆணவக் கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. கல்லூரி விடுதி வார்டன் ஆணவக் கொலையை எதிர்த்து போராடுகிறார். தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் பேட்ட படத்தில் அது குறித்து பேச உள்ளனர் என்று கூறப்படுகிறது.

ரஜினி

ரஜினி

பேட்ட படத்தின் கதை குறித்து கார்த்திக் சுப்புராஜ் அமைதியாக உள்ளார். படம் வரட்டும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்பது போன்று உள்ளார். இந்த ஆணவக் கொலை தகவல் படக்குழுவால் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நெருப்பில்லாமல் புகையாது என்கிறார்கள்.

பொங்கல்

பொங்கல்

எதுவாக இருந்தாலும் பல காலம் கழித்து ரஜினி ரசிகர்களுக்கு ஏற்ற விருந்தாக பேட்ட படம் இருக்கும் என்று நம்பப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் தலைவர் வெறியன் என்பதால் ரசிகர்களின் மனம் போல் படத்தை எடுத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X