மாமனார் படத்தில் வெறும் 5 நிமிஷம் நடிக்க ரூ. 35 லட்சம் கேட்ட சமந்தா?
ஹைதராபாத்: தனது மாமனார் நடித்து வரும் மன்மதுடு 2 படத்தில் வெறும் 5 நிமிடம் நடிக்க சமந்தா பெரிய தொகையை சம்பளமாக கேட்டாராம்.
நாகர்ஜுனா நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான வெற்றிப் படம் மன்மதுடு. 17 ஆண்டுகள் கழித்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மன்மதுடு 2 என்ற தலைப்பில் எடுத்து வருகின்றனர்.
இந்த படத்தை பாடகி சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் இயக்கி வருகிறார்.

மன்மதுடு 2
மன்மதுடு 2 படத்தில் நடிப்பதுடன் அதன் இணை தயாரிப்பாளர்களில் ஒருவராக உள்ளார் நாகர்ஜுனா. இந்த படத்தில் நாகர்ஜுனா ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். மேலும் நாகர்ஜுனாவின் மருமகள் சமந்தா கவுரவத் தோற்றத்தில் வருகிறார். இதற்காக வெளிநாட்டில் நடந்த படப்பிடிப்பில் சமந்தா கலந்து கொண்டார்.

சமந்தா
மாமனார் தயாரித்து ஹீரோவாக நடித்து வரும் படத்தில் வெறும் 5 நிமிடம் நடிக்க சமந்தா ரூ. 35 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. 5 நிமிடம் என்றாலும் சமந்தாவின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாயந்ததாம். மருமகளுடன் சேர்ந்து நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது என்று நாகர்ஜுனா புகைப்படத்துடன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு
மன்மதுடு 2 படத்தின் படப்பிடிப்பு போர்ச்சுக்கலில் நடந்தது. அதில் ரகுல் ப்ரீத் சிங் கலந்து கொண்டார். முன்னதாக ரகுல் ப்ரீத் சிங் ரொம்ப ஒல்லியாக இருப்பது நாகர்ஜுனாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. நாகர்ஜுனாவுக்கும், ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. சொல்லப் போனால் ரகுலின் திறமையை பார்த்து படக்குழு வியந்து கொண்டிருக்கிறது என்று ராகுல் ரவீந்திரன் விளக்கம் அளித்தார்.

ரகுல் ப்ரீத்சிங்
மன்மதுடு 2 படத்தில் நாகர்ஜுனா ஜோடியாக நடிப்பாதலேயே ரகுலுக்கு மற்றொரு படத்தில் அவரின் மகன் நாக சைதன்யா ஜோடியாக நடிக்கவிருந்த வாய்ப்பு கை நழுவிப் போனது. ஒரே நேரத்தில் அப்பாவுக்கும், மகனுக்கும் ரகுல் ப்ரீத் சிங் ஜோடியாக நடித்தால் நன்றாக இருக்காது என்று நினைத்து நாக சைதன்யா பட இயக்குநர் ரகுலை படத்தில் இருந்து நீக்கினார்.


Click it and Unblock the Notifications











