Don't Miss!
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
என்னது ப்ளூ சட்டை மாறனுக்கு சிலை வச்சிட்டாங்களா? பதறிய ரசிகர்கள்.. அவர் கொடுத்த பதிலை பாருங்க!
சினிமா விமர்சனம் செய்யும் ப்ளூ சட்டை மாறனுக்கு சிலை வைக்கப்பட்டு உள்ளதாக இணையத்தில் நிறைய புகைப்படங்கள் வெளியானது.
Recommended Video
சென்னை: சினிமா விமர்சனம் செய்யும் ப்ளூ சட்டை மாறனுக்கு சிலை வைக்கப்பட்டு உள்ளதாக இணையத்தில் நிறைய புகைப்படங்கள் வெளியானது. இது தொடர்பாக தற்போது ப்ளூ சட்டை மாறன் டிவிட் செய்துள்ளார்.
தமிழ் டாக்கீஸ் சேனலுக்காக யூ டியூபில் ப்ளூ சட்டை மாறன் சினிமா விமர்சனம் செய்து வருகிறார். இவர் செய்யும் சினிமா விமர்சனங்கள் எல்லாம் தமிழகம் முழுக்க பெரிய அளவில் பிரபலம்.
மிகவும் காமெடியாகவும், விறுவிறுப்பாகவும் இவர் விமர்சனம் செய்வார். அதிலும் சில படங்களை மிக மோசமாக இவர் கலாய்க்கவும் செய்துள்ளார்
நீங்க கத்ரினா ஃகைப்பா? அப்படியே இருக்கீங்க.. ஸ்டன் ஆன ரசிகர்கள்.. வைரலாகும் இன்ஸ்டா பிரபலம்!
என்ன சர்ச்சை
சில அஜித் மற்றும் விஜய் படங்களை இவர் மோசமாக விமர்சனம் செய்துள்ளார். இவரின் சில வார்த்தைகள் ரசிகர்களை சீண்டிய சம்பவங்கள் கூட நடந்துள்ளது. இதனால் இணையத்தில் எல்லா வாரமும் வெள்ளிக் கிழமையானால் இவர் வைரலாவது வழக்கமாகி வருகிறது.
சிலை வைத்த செய்தி
இந்த நிலையில் இவருக்கு ரசிகர்கள் சிலர் சிலை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. வெண்கலத்தில் சிலை வைத்துள்ளதாக செய்திகள் வெளியானது. இணையம் முழுக்க அந்த புகைப்படமும் வைரலானது.
|
ஆனால் யார்
ஆனால் இது ப்ளூ சட்டை மாறன் சிலை கிடையாது என்று சில மணி நேரங்களுக்கு பிறகு நிரூபணம் ஆனது. பாமக கட்சியில் முக்கிய தலைவராக இருந்தவரும், நிறைய தொண்டர்களை கொண்டவருமான மறைந்த காடுவெட்டி குருவின் சிலை அது என்பது குறிப்பிடத்தக்கது.
|
தவறாக செய்துவிட்டனர்
இதைத்தான் தவறுதலாக யாரோ ப்ளூ சட்டை மாறன் சிலை என்று நினைத்து ஷேர் செய்து இருக்கிறார்கள். இதையடுத்து ப்ளூ சட்டை மாறன் பதறிப்போய் ''அடேய்'' என்று அந்த டிவிட்டிற்கு பதில் அளித்தார். இந்த ப்ளூ சட்டை மாறனின் டிவிட் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.