twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பஞ்ச் வசனம் பேசும் நாய்.. எங்க காட்டுல மழை கலாட்டா!

    By Shankar
    |

    குள்ளநரிக் கூட்டம் என்ற எளிமையான, இனிமையான படம் தந்த ஸ்ரீபாலாஜி, மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படம் எங்க காட்டுல மழை.

    மிதுன் மகேஸ்வரன் - ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தில் அப்புக்குட்டிக்கு முக்கிய வேடம். சாம்ஸ், அருள்தாஸ், மதுமிதா உள்ளிட்டோரும் குறிப்பிடத்தக்க வேடங்களில் வருகிறார்கள். ஸ்ரீவிஜய் இசையமைத்துள்ளார்.

    படத்தை முழுமையாக முடித்த பிறகுதான் பத்திரிகையாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற முடிவிலிருந்த இயக்குநர் ஸ்ரீபாலாஜி, நேற்று சந்தித்தார்.

    அவரிடம் 'ஏன் இத்தனை ஆண்டு இடைவெளி?' என்றோம்.

    அவரிடம் 'ஏன் இத்தனை ஆண்டு இடைவெளி?' என்றோம்.

    "நல்ல கதை அமைய வேண்டியிருந்தது. அதைவிட முக்கியம் நல்ல தயாரிப்பாளர் கிடைப்பது. இதுதான் உண்மையான காரணம்," என்றார் ஸ்ரீபாலாஜி.

    என்ன கதை?

    என்ன கதை?

    "சென்னையில் எந்த வேலைவெட்டிக்கும் போகாத நாயகனும், ஊரிலிருந்து சென்னைக்கு வந்த அப்புக்குட்டியும் நண்பர்களாகிறார்கள். இவர்கள் இரண்டு பேரும் சென்னைக்கு வந்ததற்கு ஒரு கதை இருக்கிறது. இதுபோல் சென்னையில் ஒரு வீட்டில் சோறு போட முடியாமல் ஒரு நாயை துரத்தி விடுகிறார்கள். அந்த நாயும் இவர்களுடன் சேர்ந்துவிடுகிறது. இவர்கள் மூன்று பேரும் மையமாக வைத்து நகர்கிறது படத்தின் கதை".

    நாய்க்கு என்ன வேலை இந்தப் படத்தில்?

    நாய்க்கு என்ன வேலை இந்தப் படத்தில்?

    இந்த நாய்க்கு பதில் ஒரு நடிகரையே கூட நடிக்க வைத்திருக்கலாம். ஆனால் அதில் பெரிய சுவாரஸ்யம் இருக்காது. அதனால் நடிகருக்கு பதில் நாய். சில காட்சிகளில் நாயகன், மற்றும் அப்புக்குட்டி பேசும் வசனங்களுக்கு நாய் ஒரு பஞ்ச் வசனம் கொடுப்பது போல காட்சிகள் எடுத்துள்ளோம். இது குழந்தைகள், மற்றும் குடும்ப ஆடியன்ஸைக் கவரும் அல்லவா...

    நாய்க்கு டப்பிங் உண்டா?

    நாய்க்கு டப்பிங் உண்டா?

    ஆமாம்... பிரபல சின்னத்திரை நடிகர் ஆதவன் டப்பிங் கொடுத்திருக்கிறார். அவர் மிகவும் ஈடுபாட்டோடு அந்த வேலையைச் செய்தார்.

    நாயை நடிக்க வைத்த அனுபவம்...

    நாயை நடிக்க வைத்த அனுபவம்...

    அதை ஏன் கேட்கிறீர்கள்... இருப்பதிலேயே கடினமான வேலை நாயை நடிக்க வைப்பதுதான். ஒரு ஹீரோயினுக்குத் தர வேண்டிய முக்கியத்துவம், செலவு இந்த நாய்க்கு. அதற்காக ஏசி கார், சாப்பிட ஐஸ்கிரீம், சிக்கன், பைவ் ஸ்டார் சாக்லேட்...

    தலைப்புக்கு ஏதும் விசேஷ காரணமிருக்கா...

    தலைப்புக்கு ஏதும் விசேஷ காரணமிருக்கா...

    காரணமே இல்லீங்க. முதல் படத்திலாவது குள்ளநரித்தனமாக ஒரு வேலை செய்தார்கள். அதனால் அப்படி வைத்தேன். இந்தப் படத்துக்கு ரைமிங்காக ஒரு தலைப்பு யோசித்தேன். இந்தத் தலைப்பு அமைந்தது. சொல்லும்போதே பாஸிடிவாக உள்ளதல்லவா...

    English summary
    A dog is delivering punch dialogues in Sribalaji's upcoming movie Enga Kaattula Mazhai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X