»   »  நாய்க் குட்டிகளுக்கு முதலிரவு டூயட் காட்சி!

நாய்க் குட்டிகளுக்கு முதலிரவு டூயட் காட்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாய்க் குட்டிப் படம்... இந்தத் தலைப்பில் ஒரு படம் உருவாகிவருகிறது. முழுக்க முழுக்க நாய்க்குட்டிகளை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தை பிரபல விநியோகஸ்தர் வெற்றி வேல் தயாரிக்கிறார்.

அதென்ன நாய்க்குட்டி படம்?

"மக்கள் ஒரே மாதிரியான கதையை விரும்புவதில்லை..ஏதாவது புதுசாக எதிர் பார்க்கின்றார்கள். அதற்காக யோசிச்சதுதான் இந்தக் கதை.

Dogs play lead role in Naaikkutty Padam

நிதின் சத்யா வளர்க்கும் நாய் டோனி.. ஸ்ருதி ராமகிருஷ்ணன் வளர்க்கும் நாய் ஜீனோ. இந்த நாய் குட்டிகளில் திடீரென்று டோனி காணாமல் போய் விடுகிறது. அந்த நாயைத் தேடி நிதின்சத்யா ஒரு பக்கம் அலைகிறார். இன்னொரு பக்கம் நான்கு திருடர்கள். அத்துடன் அரசியல்வாதிகள் இருவர், இப்படி ஆளாளுக்கு அந்த நாயை ஏன் தேடுகிறார்கள் என்பது திரைக்கதை.

இதற்காக 'பக்' இனத்து நாய்களை விலை கொடுத்து வாங்கினோம். நாங்கள் ஆறுமாதம் பழக்கப்படுத்தினோம். அதற்குப் பிறகு தேவர் பிலிம்ஸின் நாய் டிரெயினர் லாரன்ஸ் ஒரு வருடம் டிரெயினிங் கொடுத்தார்.

Dogs play lead role in Naaikkutty Padam

இந்த நாய்கள் பிஸ்லரி வாட்டர் தான் குடிக்கும். சாதாரண நீரில் குளித்தால் முடி கொட்டிவிடும் என்பதால் கேன் வாட்டரில்தான் குளிக்க வைத்தோம். நல்ல விலையுயர்ந்த உணவு என்று ராஜமரியாதை! ஹீரோ, ஹீரோயினுக்கு நிகரான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தோம்.

இந்த படத்தில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்து, அதற்கு முதலிரவு ஏற்பாடு செய்து "குட்டி குட்டி நாய்க்குட்டி சுட்டி தனம் செய்யுது..." என்று டூயட்டும் வைத்திருக்கிறோம்."

Dogs play lead role in Naaikkutty Padam

-படத்தின் இயக்குநர் ரங்கா சொல்லும் தகவல்கள் இவை.

படத்துக்கு இசை ஜெய கே தாஸ். ஒளிப்பதிவு ஆனந்த்.

Read more about: tamil cinema
English summary
Naaikkutty Padam is a movie based on two dogs and directed by debutant Ranga.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil