»   »  விஜய்க்கு டான்ஸ் கற்றுக் கொடுப்பது சவாலானது: டான்ஸ் மாஸ்டர் ஷெரிப்

விஜய்க்கு டான்ஸ் கற்றுக் கொடுப்பது சவாலானது: டான்ஸ் மாஸ்டர் ஷெரிப்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறப்பான டான்ஸரான விஜய்க்கு டான்ஸ் கற்றுக் கொடுப்பது சவாலான விஷயம் என தெறி படத்தின் டான்ஸ் மாஸ்டர் ஷெரிப் தெரிவித்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வரும் தெறி படத்தின் டீஸர் அண்மையில் வெளியானது. டீஸரை விஜய் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் இந்த படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா விஜய்யின் மகளாக நடிக்கிறார்.


இந்நிலையில் படம் பற்றி டான்ஸ் மாஸ்டர் ஷெரிப் கூறுகையில்,


விஜய்

விஜய்

நான் தெறி படத்தில் மூன்று பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளேன். ஒரு பாட்டில் விஜய், சமந்தா, ஏமி ஆகியோர் ஆடுவார்கள். மற்றொரு பாட்டில் விஜய்யும், ஏமியும் ஆடுவார்கள்.
நைனிகா

நைனிகா

ஒரு பாடலுக்கு விஜய்யும், நைனிகாவும் ஆடுவார்கள். நைனிகா டான்ஸ் ஸ்டெப்பை புரிந்து கொண்டு ஆட நேரம் எடுத்தார். விஜய் பொறுமையாக அந்த குழந்தையுடன் ஆடினார். கேமராவுக்கு பின்னாலும் அப்பா விஜய்யும், மகள் நைனிகாவும் மிகவும் அன்பாக பழகுவார்கள்.
டான்ஸர்

டான்ஸர்

விஜய் போன்ற சிறப்பான டான்ஸருக்கு ஸ்டெப்ஸ் கற்றுக் கொடுப்பது சவாலான விஷயம். எவ்வளவு கஷ்டமான ஸ்டெப்ஸையும் அவர் எளிதில் ஆடிவிடுவார் என்றார் ஷெரிப்.


குழந்தை

குழந்தை

ஒரு குழந்தை நடிக்கும் படத்திற்கு ஷெரிப் தற்போது தான் டான்ஸ் ஸ்டெப்ஸ் கற்றுக் கொடுத்துள்ளார். ஏமி ஷெரிப் கற்றுக் கொடுத்த ஸ்டெப்ஸ்களை விரைவில் கற்றுக் கொண்டு ஆடி அசத்தியுள்ளார்.
English summary
Choreographer Sherif said that it is really challenging to choreograph for a dancer like Vijay.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil