அய்யோ, அந்த நடிகருடன் ரொமான்ஸ் செய்வது பெரிய அக்கப்போரு: சமந்தா

By Siva

ஹைதராபாத்: நாகசவுர்யாவுடன் ரொமான்ஸ் செய்வது பெரிய அக்கப்போரு என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

நந்தினி ரெட்டி இயக்கத்தில் நாகசவுர்யா, சமந்தா, லட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ள தெலுங்கு படம் ஓ பேபி. இந்த படம் வரும் ஜூலை மாதம் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தை விளம்பரம் செய்யும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் சமந்தா.

ஓ பேபி படத்தில் நாகசவுர்யா, சமந்தா வரும் காதல் பாடலான நாலோ மைமரப்புவின் லிரிக்கல் வீடியோவை நேற்று முன்தினம் வெளியிட்டனர். அந்த பாடலுக்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சமந்தா

சமந்தா

நாலோ மைமரப்பு பாடலை படமாக்கியது குறித்து சமந்தாவும், நந்தினி ரெட்டியும் தெரிவித்துள்ளனர். பாடல் பற்றி சமந்தா கூறியதாவது, ஓ பேபி படத்தில் நாகசவுர்யாவுடன் ரொமான்ஸ் செய்தது ரொம்ப கஷ்டமாக இருந்தது. அவர் அநியாயத்திற்கு வெட்கப்படுகிறார். நாகசவுர்யாவுடன் சேர்ந்து ரொமான்டிக் பாடலில் நடிப்பது தான் மோசமானது. ஓவராக வெட்கப்படுகிறார் மனிதர். பின்னர் அவரை ரொமான்டிக்காக மாற்ற நான் அவரிடம் நாய்கள் பற்றி பேசி வழிக்கு கொண்டு வந்தேன் என்றார்.

நாகசவுர்யா

நாகசவுர்யா

நாகசவுர்யா பற்றி நந்தினி ரெட்டி கூறியதாவது, செட்டில் நாகசவுர்யா இருந்தால் நான் ரொம்ப டென்ஷனாக உணர்வேன். ஏனென்றால் அவர் ரொம்பவும் கூச்ச சுபாவம் உள்ளவர். செட்டில் ஹீரோயினை பார்த்தால் அவர் 20 அடி தள்ளி தான் நிற்பார். சமந்தா சவுர்யாவிடம் நாய்கள் பற்றி பேசியுள்ளார் என்றார்.

நாய்கள்

நாய்கள்

ஒரு ஹீரோவை ரொமான்டிக்காக மாற்ற நாய்கள் பற்றி பேசினாரா சமந்தா, என்னங்க சொல்கிறீர்கள் என்று நந்தினி ரெட்டியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, நாகசவுர்யாவுக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் தான் சமந்தா தான் வளர்க்கும் நாயான ஹாஷ் அகினேனி பற்றி சவுர்யாவிடம் பேசியுள்ளார். இருவருக்கும் பொதுவாக பிடித்த விஷயம் நாய்கள் தான் என்று நந்தினி கூறினார்.

ஓ பேபி

ஓ பேபி

ஓ பேபி படத்தில் ரொமான்டிக் பாடல்களை பார்க்கும்போது சவுர்யாவும், சமந்தாவும் எதைப் பற்றி பேசுகிறார்கள் என்பதை நீங்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம். அவர்கள் நாய்களை பற்றி பேசியுள்ளனர். நாகசவுர்யா, சமந்தா ஜோடி பார்க்க ரொம்ப அழகாக உள்ளது என்றார் நந்தினி. ஓ பேபி கொரிய படமான மிஸ் கிரானியன் ரீமேக் ஆகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X