புது டீம்… புது முயற்சி… த்ரில்லர் மூவி டோலா … இயக்குனர் பாக்கியராஜ் பாராட்டு

சென்னை : நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படம் எப்போதும் வெற்றிபெறும் அதுபோல 'டோலா' படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் கூறினார்.

இரண்டு கலைஞர்களை மட்டுமே வைத்து வித்தியாசமான முறையில் புது டீம் உருவாகி இருக்கும் இந்த திரில்லர் படத்திற்கு வாழ்த்துக்கள் என்றார்.

Dola thriller movie audio release

இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஷாம் குமார் பேசும்போது, நான் இந்த இடத்திற்கு வருவதற்கு முக்கிய காரணம் என் நண்பர்கள் தான் என்றார். ஊக்குவிக்க முடியவில்லையென்றாலும் கைதட்டி விடாமலாவது இருங்கள் அப்போது தான் பெரிய படங்கள் உருவாகும். ஒரு ஜிம் பாயாக வந்தவன் இன்று தயாரிப்பாளராக நிற்கிறேன் அதுதான் சினிமா என்றார்.

Dola thriller movie audio release

சினிமாவை நேசியுங்கள், அதேபோல் குடும்பத்திலுள்ளவர்களையும் நேசியுங்கள். நான் இந்த நிலைக்கு வருவதற்கு என் குடும்பமும் ஒரு காரணம். ஒரு நல்ல படம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்துதான் இப்படத்தை எடுத்தேன். இப்படத்திற்குப் பிறகு 'ரகுடு' என்ற கேங்ஸ்டர் படம் அதிகப் பொருட்செலவில் எடுக்க இருப்பதாக கூறினார்.

Dola thriller movie audio release

மேலும் இசை வெளியீட்டு விழாவில் டோலா படத்தின் கதாநாயகன் ரிஷி ரித்விக் இப்படம் குறித்து பேசினார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதற்கு என்னை அழைத்து கதை கூறினார்கள். இரண்டு பேர் தான் என்றாலும் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒளிப்பதிவாளர், இயக்குநர் மற்றும் அனைவரின் கடுமையான உழைப்பால் 10 நாட்களுக்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டோம்.

Dola thriller movie audio release

சினிமாத் துறையில் வித்தியாசமாகவும், சிறப்பாகவும் செய்தால் தான் நிலைத்து நிற்க முடியும். மேலும், சண்டைக் காட்சிகளில் நான் நன்றாக நடித்திருப்பதற்கு பாண்டியன் மாஸ்டர் தான் காரணம். சிலம்பம் முதல் எனக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்தார்கள் என்றார்.

மேலும் விழாவில் பேசிய கதாநாயகி பிரேர்னா, இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். எனக்கு தமிழ் தெரியாததால் கதாநாயகன் ரிஷி ரித்விக் படப்பிடிப்பில் எனக்கு மிகவும் உதவி புரிந்தார் என்று கூறினார்.

Dola thriller movie audio release

மேலும் இசைவெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் கே. பாக்யராஜ், 'டோலா' படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களைப் பார்க்கும்போது ஒரு சிலரைத் தவிர மற்ற அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் புதுமுகம் தான். காட்சி அமைப்புகளைப் பார்க்கும்போது ஒளிப்பதிவாளருக்கு இது முதல் படம் மாதிரி தெரியவில்லை. கதாநாயகியும் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எப்போதும் நல்ல கதையம்சம் கொண்ட படம் நிச்சயம் வெற்றிபெறும் இது போல இப்படமும் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்றார்.

அவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு படம் வெற்றி பெற வாழ்த்தினர். நிகழ்ச்சியின் நிறைவாக 'டோலா'படத்தின் இசைத் தகடு வெளியிடப்பட்டது. அதன்பின்பு ஜோக்கர்ஸ் கிரியேஷன்ஸ்-ன் இரண்டாவது தயாரிப்பான 'ரகுடு' திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X