புற்றுநோயால் சீரியல் நடிகை மரணம்.. அடுத்த நாளே சகோதரி உயிரிழந்த கொடுமை..நிலைகுலைந்த குடும்பம்!
மும்பை: சின்னத்திரையில் நடித்து வந்த சகோதரிகளான டோலி சோஹி மற்றும் அமந்தீப் சோஹி அடுத்த நாளில் உயிரிழந்துது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இருவரின் மரணம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, அவரது குடும்பத்தினர். இருவரின் மரணம் தங்கள் குடும்பத்தை நிலைகுலைய செய்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
சின்னத்திரை நடிகையான டோலி சோஹி, ஜானக் என்ற சீரியலில் சிருஷ்டி முகர்ஜியாக நடித்து பிரபலம் ஆனார். பாபி, கலாஷ், மேரி ஆஷிகி தும் சே ஹி, கூப் லடி மர்தானி ஜான்சி கி ராணி போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். டோலி சோஹி போல அவரது சகோதரி அமந்தீப் சோஹி பத்தமீஸ் தில் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார்.

சீரியல் நடிகை: பிஸியான நடிகையாக இருந்த டோலி சோஷி கடந்த சில மாதங்களாகவே கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால், சீரியலில் நடிப்பதில் இருந்து விலகினார். அதற்கான சிகிச்சையையும் பெற்று வந்த டோலி சோஷி, தனது இன்ஸ்டாகிராமில் புற்று நோயால் போராடுவது குறித்தும் அதன் வலிகள் குறித்தும் பகிர்ந்து வந்தார். அண்மையில் இவர் பகிர்ந்த பதிவில், உங்கள் அன்பையும் பிரார்த்தனைகளையும் அனுப்பிய அனைவருக்கும் நன்றி, என் வாழ்க்கை ரோலர் கோஸ்டராக, அதனுடன் நான் போராடி வருகிறேன் என்று பதிவிட்டு இருந்தார். உருக்கமான இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று ஆறுதல் கூறிவந்தனர்.
கர்ப்பப்பை புற்றுநோய்: இந்த நிலையில், கர்ப்பப்பை புற்று நோய்க்காக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டோலி சோஷி மார்ச் 7ந் தேதி அதிகாலை நான்கு மணிஅளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்தார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அமந்தீப் சோஹியும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவரும் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தது அவரது குடும்பத்தை மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சோகத்தில் ரசிகர்கள்: இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட சகோதரர் மனு சோஷி, நாங்கள் பேரழிவிற்கு ஆளாகியுள்ளோம். டோலி சோஷி மார்ச் 7ந் தேதி காலமானார். அவருக்கு கர்ப்பப்பை புற்று நோய் முற்றிவிட்டது . அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அமன்தீப் சோஹி மார்ச் 8ந் தேதி காலமானார். அவருக்கு மஞ்சள் காமாலை இருப்பது கண்டறியப்பட்டது. டோலி மற்றும் அமந்தீப் இருவரின் இறுதி சடங்கு மும்பையில் உள்ள எங்களது இல்லத்தில் நடைபெறும் என்றார். இருவரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











