twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முன்னாள் தாதா..சினிமா தயாரிப்பாளர்.. முத்தப்பா ராய் பெங்களூரில் மரணம்.. புற்றுநோயால் உயிர்பிரிந்தது!

    |

    சென்னை: முன்னாள் தாதாவும் சினிமா தயாரிப்பாளருமான முத்தப்பா ராய் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 68.

    முத்தப்பா ராய் முன்னாள் நிழல் உலக தாதா ஆவார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூரின் நிழல் உலகிற்கு தலைமை தாங்கியவர் முத்தப்பா ராய்.

    அதிநவீன, படித்த மற்றும் அழகானவர் தாதாவாக வலம் வந்தார் முத்தப்பா ராய். எம்.பி. ஜெயராஜ், கோத்வால் ராமச்சந்திரா போன்ற அவரது முன்னோடிகளைப் போல் இல்லாமல், ராய் மங்களூருவுக்கு அருகில் ஒரு நல்ல குடும்ப பின்னணியைச் சேர்ந்தவர்.

    இதயம் நொறுங்கியது.. வலது கையாக இருந்தவர்.. உதவியாளர் ஆமோஸ் மறைவுக்கு அமீர்கான் கண்ணீர் அஞ்சலிஇதயம் நொறுங்கியது.. வலது கையாக இருந்தவர்.. உதவியாளர் ஆமோஸ் மறைவுக்கு அமீர்கான் கண்ணீர் அஞ்சலி

    நிழல் உலகத்துடன் தொடர்பு

    நிழல் உலகத்துடன் தொடர்பு

    காமர்ஸ் பட்டதாரியான அவர், பொதுத்துறை நிறுவனமான விஜயா வங்கியில் அதிகாரியாக தனது வாழ்க்கையை தொடங்கினார். ஒரு கூச்ச சுபாவமுள்ள மனிதராக இருந்தார். 1980 களின் பிற்பகுதியில், ராய் பெங்களூருவின் நிழல் உலகத்துடன் தொடர்பு கொண்டார்.

    நீதிமன்றத்தில்..

    நீதிமன்றத்தில்..

    1990 ஆம் ஆண்டில் பரந்த பகல் வெளிச்சத்தில் அப்போதைய பெங்களூரின் டான், எம்.பி. ஜெயராஜை தாக்கிய பின்னர் ஒரே இரவில் பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த கொலை அவரை ஒரு டானாக உயர்த்தியது. தனது வாழ்க்கையில் இரண்டு தீவிர அட்டம்ப்ட்டுகளில் இருந்து தப்பினார். பெங்களூருவில் உள்ள ஒரு நகர நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டபோது அவர் சுடப்பட்டார்.

    கைது வாரண்ட்

    கைது வாரண்ட்

    அப்போது ஐந்து தோட்டாக்கள் அவரைத் தாக்கியும் அவர் உயிர் தப்பினார். முத்தப்பா ராய் , பிரபல நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமின் வலது கரமானார். இளம் வயதிலேயே குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டார். கர்நாடக போலீஸ், கொலை உட்பட 8 வழக்குகளில் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது.

    ஜெய கர்நாடகா

    ஜெய கர்நாடகா

    2002ஆம் ஆண்டு துபாயில் கைது செய்யப்பட்டார். பின்னர் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி முத்தப்பா ராயை விடுதலை செய்தது போலீஸ். பின்னர் இயல்பு உலகுக்கு திரும்பிய அவர் ஜெய கர்நாடகா என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தினார்.

    இரண்டு படங்கள்

    இரண்டு படங்கள்

    முத்தப்பா ராய் துளு மொழி பேசும் பண்ட் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். முத்தப்பா ராய் திரைத்துறையுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். கஞ்சில்டா பாலி என்ற துளு மொழி படத்தை 2011ஆம் ஆண்டு நடித்து தயாரித்திருந்தார். இதனை தொடர்ந்து 2012ஆம் ஆண்டு கட்டாரி வீரா சரசுந்தராங்கி படத்தை நடித்து தயாரித்திருந்தார்.

    ராய் பயோபிக்

    ராய் பயோபிக்

    பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா, ராயின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்க விரும்பினார். இந்த படத்தில் நடிகர் விவேக் ஓபராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பெங்களூரு, மங்களூரு, மும்பை, துபாய் மற்றும் லண்டனில் இப்படம் காட்சியாக்கப்பட்டது.

    ரிலீஸ் ஆகவில்லை

    ரிலீஸ் ஆகவில்லை

    இருப்பினும், புரடெக்ஷன் பணிகளின் தாமதம் காரணமாக இந்தப் படம் ரிலீஸ் ஆகவில்லை. ராய் அவரது படத்தை பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்தார். மேலும் தனது பிறந்தநாளை ராம் கோபால் வர்மா மற்றும் விவேக் ஓபராய் ஆகியோருடன் கொண்டாடினார்.

    பொதுவாழ்க்கையில் இருந்து..

    பொதுவாழ்க்கையில் இருந்து..

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்டார் முத்தப்பா ராய். புற்றுநோயைக் கண்டறிந்த பின்னர், ராய் பொது வாழ்க்கையிலிருந்து விலகினார் மேலும் ஜெய கர்நாடகாவில் இருந்தும் ராஜினாமா செய்தார்.

    Recommended Video

    Director Shankar AD Varun Prasath No more | ஐ Assistant Director
    முத்தப்பா ராய் மரணம்

    முத்தப்பா ராய் மரணம்

    இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார் முத்தப்பா ராய். அவரது மனைவி ரேகா கடந்த 2013ஆம் ஆண்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். முத்தப்பா ராய்க்கு ரிக்கி ராய், ராக்கி ராய் என இரண்டு மகன்கள் உள்ளனர். முத்தப்பா ராயின் இறுதி சடங்குகள் வெள்ளிக்கிழமை பிடதியில் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

    English summary
    Don and actor Muthappa Rai passes away at the age of 68. He was admitted in hospital due to brain cancer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X