சிவகார்த்திகேயன் குபீர் சிரிப்பு.. விழுந்து விழுந்து சிரித்த டான் படக்குழு.. என்னனு நீங்களே பாருங்க !
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெயிட்டுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாவின் மினிமம் கியாரண்டி ஹீரோ என பெயர் எடுத்துள்ள சிவகார்த்திகேயன் நடிப்பில் மே மாதம் வெளியான திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார்.
இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன், இவர்களுடன் சிவாங்கி, பால சரவணன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, மிர்ச்சி விஜய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

டான்
டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் பள்ளி மாணவன்,கல்லூரி மாணவன், இயக்குநர் என மூன்று விதமான கேரக்டரில் நடித்திருப்பார். இப்படத்தில் நகைச்சுவை, அப்பா - மகன் எமோஷனல் காட்சிகள் என அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்வித்தது. படம் ரிலீசானது முதல் அமோக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பியது. டான் படமானது டாக்டர் படம் போலவே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை படைத்தது.

பாராட்டிய ரஜினி
அனிருத் இசையமைத்திருந்த இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. டாக்டர் வெற்றியை தொடர்ந்து டான் திரைப்படத்திலும் இவர்களது கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் படத்தை பார்த்த ரஜினிகாந்த், படத்தைப் பார்த்து தான் கண்கலங்கியதாக தெரிவித்து இருந்தார். சிவகார்த்திகேயனை நேரில் அழைத்தும் பாராட்டி இருந்தார்.
மேக்கிங் வீடியோ
இந்நிலையில், டான் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. டான் படத்திலேயே முக்கியமான காமெடி சீன் என்றால், அது இந்த சீன் தான். சிவகார்த்திகேயன் இதுதான் என் அப்பா என்று பொய்யாக சூரியை அழைத்துக்கொண்டு கல்லூரிக்கு போவார். அப்போது, சூரியும் சிவகார்த்திகேயனும் கொரியன் ஸ்டைலில்.. ஏ..ப்ஃபா...என்று இருவரும் ராகம் போட்டுக்கொண்ட பேசுவார்கள். அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்கவைத்த இந்த வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

விழுந்து விழுந்து சிரித்த படக்குழு
இயக்குநர் சிபி சக்கரவர்த்தி நடிகர் சூரிக்கு இந்த டையலாக்கை எப்படி பேசுவது என்று சொல்லித்தருகிறார். சிவகார்த்திகேயனும், சூரியும் இந்த வசனத்தை பேச டான் படக்குழுவினரால் சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து குபீர் என்று சிரிக்கின்றனர். இந்த வீடியோ சிவகார்த்திகேயன் ரசிகர்களால் தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











