சுல்தான் படத்தை புகழ்ந்த டான் இயக்குனர்.. என்ன சொன்னார் தெரியுமா!
சென்னை : கார்த்தி நடிப்பில் வெளியாகியிருக்கும் சுல்தான் திரைப்படத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.
Recommended Video
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் ரசிக்கும் வண்ணம் சுல்தான் இருப்பதால் குடும்பம் குடும்பமாக படத்தை காண திரையரங்கில் குவிகின்றனர்.
ஏற்கனவே சுல்தான் படத்தை பார்த்த பல பிரபலங்கள் பாராட்டுகளை தெரிவித்து இருக்க இப்பொழுது சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கி வரும் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படம் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியாகி பல்வேறு வசூல் சாதனைகளை செய்து வருகிறது. திரையரங்குகளில் சற்றும் கூட்டம் குறையாமல் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது.

முன்னணியில் உள்ளது
கார்த்தி, ரஷ்மிகா மந்தனா, லால், நெப்போலியன் ,பொன்வண்ணன், சிங்கம்புலி, சென்ராயன், யோகிபாபு என பலர் நடித்திருக்க காமெடி கலந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி யுள்ள சுல்தான் ரசிகர்களை மட்டுமல்லாமல் திரை பிரபலங்களையும் கவர்ந்து பல பாராட்டுகளை பெற்றுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒருசேர வெளியான சுல்தான் மாஸ்டருக்கு பிறகு அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் முன்னணியில் உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆஹா ஓஹோ
சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் டான் படத்தை அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கி வருகிறார். இவர் இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். டான் படத்தின் படப்பிடிப்புகள் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் நடைபெற்று வரும் நிலையில் சுல்தான் படத்தை பார்த்துவிட்டு ஆஹா ஓஹோ என பாராட்டியுள்ளார்.

மாஸான படத்தை கொடுத்துள்ளார்
அதில் அவர் கூறியிருப்பதாவது சுல்தான் ஒரு கமர்சியல் வின்னர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஹீரோவின் படத்திற்கு வைத்திருக்கும் பிரம்மாண்ட வரவேற்பை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிப்பாக இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளை இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் கையாண்டிருப்பது மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. நடிகர் கார்த்தி மற்றுமொரு மாஸான படத்தை கொடுத்துள்ளார். இவ்வாறு இயக்குனர் சிபிசக்கரவர்த்தி சுல்தான் படத்தை பாராட்டி தெரிவித்ததற்கு ரசிகர்கள் பலரும் டான் அப்டேட்டை பற்றி ஆவலுடன் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











