ஸ்டைல் லுக்கில் சிவகார்த்திகேயன்... 'டான்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

சென்னை : சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா அருள் மோகன் இப்படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் குக் வித் கோமாளி சிவாங்கி, இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்

டான் திரைப்படம்

டான் திரைப்படம்

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் 'டான்' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துவருவதாகக் கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து எஸ்.கே புரொடக்சன் தயாரிக்கிறது

டப்பிங் ஓவர்

டப்பிங் ஓவர்

டான் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்து, படக்குழு டப்பிங் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. நேற்று தனது டப்பிங் பணியை முடித்துள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்நிலையில், டான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் சிவகார்த்திகேயன் கைகளை உயர்த்திக்கொண்டு இருக்கிறார். மேலும், பாலாசரவணன் கையில் மைக்கை வைத்துக்கொண்டு கத்துகிறார். பின்னால் இருக்கும் சிவாங்கி நிற்கிறார்.

ஜனவரியில் வெளியாக வாய்ப்பு

ஜனவரியில் வெளியாக வாய்ப்பு

டான் திரைப்படத்தின் வெளியீட்டுப் பணிகளில் படக்குழு மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. டிசம்பரில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படமும், ஜனவரி 7 ஆம் தேதி ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர், பொங்கலையொட்டி வலிமை வெளியாகவிருப்பதால் டான் படக்குழு ஜனவரி இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X