சிவகார்த்திகேயனின் “டான்''... படம் குறித்து வெளியான சூப்பர் தகவல் !

சென்னை : சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது.

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், குக் வித் கோமாளி சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

டாக்டர்

டாக்டர்

கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் தெலுங்கில் 'கேங்ஸ்டர்' படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் தமிழில் அறிமுகமாகி உள்ளார். யோகிபாபு வினய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷன் இப்படத்தை தயாரித்துள்ளது. அக்டோபர் 9ந் தேதி வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி வசூலில் சாதனை படைத்துள்ளது. சன் தொலைக்காட்சியில் தீபாவளிக்கு ஒளிபரப்பாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது.

விறுவிறுப்பான டப்பிங்

விறுவிறுப்பான டப்பிங்

டாக்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கி வருகிறார் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், டப்பிங் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் டப்பிங் செய்யும் போது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருந்தார்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்நிலையில், டான், திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். டாக்டர் திரைப்படம் போல இந்த திரைப்படமும் வெற்றி அடைய வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X