3 நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் சிவகார்த்திகேயனின் பே பாடல்!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலை அள்ளியது

அடுத்ததாக அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வருகிறார்

கல்லூரி கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் இரண்டாவது பாடல் பே மூன்று நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில் இப்பொழுது 5 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

காமெடிக்கு பஞ்சமிருக்காது

காமெடிக்கு பஞ்சமிருக்காது

நடிகர் சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். குடும்பம் குடும்பமாக படையெடுத்து திரையரங்குகளில் இவரின் படங்களை கண்டு ரசிப்பார்கள். அந்த அளவிற்கு இவரது திரைப்படங்கள் குடும்ப ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் நீண்ட இழுபறிக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியானது. வழக்கமான சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் காமெடிக்கு பஞ்சமிருக்காது குறிப்பாக சிவகார்த்திகேயன் அடிக்கும் கவுண்டர்கள் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் டாக்டர் வழக்கமான சிவகார்த்திகேயன் படமாக அல்லாமல் மிகக் குறைந்த அளவிலேயே வசனங்கள் பேசியிருப்பார்.

அடுத்தடுத்து இரண்டு படங்களில்

அடுத்தடுத்து இரண்டு படங்களில்

டாக்டர் கொடுத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இப்பொழுது அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். டாக்டர் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறியுள்ள பிரியங்கா மோகன் இந்த படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் உடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஜோடி போட்டு நடித்து வருகிறார்

இரண்டாவது சிங்கிள் பே

இரண்டாவது சிங்கிள் பே

முழுக்க முழுக்க கல்லூரி கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் எஸ் ஜே சூரியா,சமுத்திரக்கனி, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முற்றிலும் கலகலப்பான படமாக உருவாகி வரும் டான் மார்ச் 25ல் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் மூன்று தினங்களுக்கு முன்பு டான் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் பே வெளியானது

 மூன்றே நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது

மூன்றே நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது

விக்னேஷ் சிவனின் வரிகளில் அனிருத்தின் இசையில் ஆதித்யாவின் குரலில் வெளியான பே ரொமான்டிக் காதல் பாடலாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்போது பே வெளியான மூன்றே நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X