விஜய் படமா.. அய்யோ எல்லாம் வதந்திங்க.. அலறியடித்து ஓடிய டான் இயக்குநர்.. என்ன ஆச்சு தெரியுமா?

சென்னை: சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி.

இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநராக இருந்த சிபி சக்கரவர்த்தி நடிகர் விஜய்யின் மெர்சல் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி உள்ளார்.

நடிகர் விஜய்யுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் டிரெண்டான நிலையில், டான் படத்தை அடுத்து விஜய்யின் படத்தை இயக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகின.

அட்லி சிஷ்யன்

அட்லி சிஷ்யன்

இயக்குநர் ஷங்கரின் சிஷ்யனான அட்லி ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை இயக்கிய அட்லி, தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். அட்லியின் சிஷ்யனான சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயனின் டான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார்.

சிவகார்த்திகேயனின் டான்

சிவகார்த்திகேயனின் டான்

இயக்குநர் நெல்சனின் டாக்டர் படம் மூலம் 100 கோடி நாயகனாக மாறிய சிவகார்த்திகேயன் அடுத்ததாக அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்தார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை வாரி குவித்தது. டான் படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி முதல் படத்திலேயே 100 கோடி வசூலை சாத்தியமாக்கிய நிலையில், அடுத்து அவர் பெரிய நடிகர் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் படம்

விஜய் படம்

இந்நிலையில், சிபி சக்கரவர்த்தி சமீபத்தில் நடிகர் விஜய்யை சந்தித்து அவருக்கு ஒரு சூப்பரான கதையை சொல்லி ஓகே செய்து விட்டார் என்றும், தளபதி 67 படத்தைத் தொடர்ந்து தளபதி 68 படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என்றும் தகவல்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வந்த நிலையில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி அது தொடர்பான விளக்கத்தை அளித்துள்ளார்.

எல்லாமே வதந்தி

எல்லாமே வதந்தி

பரவலாக உலாவி வரும் அந்த தகவலை முற்றிலும் வதந்தி பாஸ் என மறுத்துள்ளார் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி. இப்போது தான் அடுத்த படத்திற்கான திரைக்கதையை எழுதி வருகிறேன். கதை பணிகள் முடிந்த பிறகு தான் அந்த கதைக்கு யார் சரியாக வருவார் என்பதை முடிவு செய்து அந்த ஹீரோவுக்கு கதை சொல்லி ஓகே செய்ய் வேண்டும். நடிகர் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை இயக்கும் ஆசை யாருக்குத்தான் இருக்காது. அதற்கான சமயம் வரும் போது கட்டாயம் பண்ணுவேன், ஆனால், தற்போது வெளியாகி இருப்பது வதந்தி தான் என விளக்கி உள்ளார்.

Recommended Video

Vijay| விஜய் முன்ன மாதிரி கிடையாது.. அனைவரையும் எச்சரித்த SAC | *Rewind Raja
விஜய் கைவசம்

விஜய் கைவசம்

நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக மீண்டும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்றும் மகிழ் திருமேனி விஜய்யை இயக்க வேண்டும் என்றும் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X