BMW கார் வாங்கிய இயக்குநர்.. எடுத்ததே ஒரே படம்.. குதர்க்கமாக கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பல ஹிட் திரைப்படத்தில் நடித்த நடிகர்களே சொகுசு கார்களை வாங்குவதற்கு பல ஆண்டுகள் தவம் இருக்கும் நிலையில், ஒரே ஒரு படத்தை இயக்கிய இயக்குநர் BMW காரை வாங்கி உள்ளார். இந்த போட்டோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் எப்படி இது சாத்தியம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தெறி, மெர்சல் படங்களில் இயக்குநர் அட்லீயிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி. இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தை இயக்கி முதன்முறையாக இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்டோர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

சிபி சக்கரவர்த்தி: இப்படத்தில் சமுத்திரக்கனி சிவகார்த்திகேயனின் அப்பாவாக நடித்திருந்தார. அப்பா மகன் பாசம் குறித்தும், கல்லூரி வாழ்க்கை குறித்தும் பேசிய இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. முதல் பாதியில் கலகலப்பாக நகரும் கதைக்களம், இரண்டாம் பாதியில் வலுவான எமோஷன் மற்றும் சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்ததாக, ரசிகர்கள் மத்தியில் நன்றாக ரீச் ஆனது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்தது.

டான் பட இயக்குநர்: டான் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் சிபி சக்கரவர்த்தி கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. அதே போல, தனுஷிடம் கதை சொல்லி இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இப்படி நான் திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி, இரண்டாவது படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

BMW கார்: இந்த நிலையில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது கார் வாங்கி உள்ள போட்டோவை ஷேர் செய்துள்ளார் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் சிபி சக்கரவர்த்தி தனது பெற்றோருக்கு ஒரு டாடா நிறுவனத்தின் காரை வாங்கி கொடுத்த நிலையில், தற்போது BMW கார் வாங்கியுள்ளார். இந்த போட்டோவிற்கு ஒரு பக்கம் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், சில நெட்டிசன்ஸ், இயக்கியதே ஒரு படம் தான் அதுக்குள்ள எப்படி BMW கார் வாங்க முடிந்தது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏன் என்றால், அறிமுக இயக்குநர்களுக்கு குறைந்த சம்பளம் தான் தந்திருப்பார்கள் அப்படி இருக்கும் போது இது எப்படி சாத்தியம் என்று கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications