டான் படத்துல சிவாங்கிக்கு முக்கியமான ரோல்... மனம்திறந்த இயக்குநர் சிபி

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் டான்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் சிவாங்கியின் கேரக்டர் குறித்து இயக்குநர் மனம் திறந்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியான படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் கடந்த மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகி எதிர்பார்க்காத வெற்றியை கொடுத்துள்ளது. வசூல்மழையையும் விமர்சனரீதியான சிறப்பையும் இந்தப் படம் பெற்றது.

டான் படம்

டான் படம்

இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லியின் உதவி இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் பிரியங்கா அருள் மோகன்.

கல்லூரி மாணவர்

கல்லூரி மாணவர்

படத்தில் அவர் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். மேலும் சில காட்சிகளில் பள்ளி மாணவராகவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. கல்லூரியில் அவர் செய்யும் அட்ராசிட்டிகளை மையமாக கொண்டு படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் டப்பிங் உள்ளிட்ட பணிகளை அவர் முடித்துக் கொடுத்துள்ளார். ட்விட்டரில் அப்டேட்டும் வெளியிட்டார்.

சிவாங்கியின் கேரக்டர்

சிவாங்கியின் கேரக்டர்

மேலும் இந்தப் படம் தனது கல்லூரி நாட்களை நினைவு படுத்தியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ரசிகர்களுக்கும் தங்களது கல்லூரி நாட்களை நினைவுப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். விரைவில் இந்தப் படம் ரிலீசாக உள்ள நிலையில், இந்தப் படத்தில் சிவாங்கியின் கேரக்டர் குறித்து டைரக்டர் சிபி சக்ரவர்த்தி மனம் திறந்துள்ளார்.

குக் வித் கோமாளி சிவாங்கி

குக் வித் கோமாளி சிவாங்கி

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின்மூலம் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளவர் சிவாங்கி. அந்த நிகழ்ச்சியில் அவர் செய்த அலப்பறைகள் ரசிகர்களை அவர் பக்கம் இழுத்துள்ளது. மேலும் ட்விட்டரிலும் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

முக்கியமான கேரக்டர்

முக்கியமான கேரக்டர்

இந்நிலையில் இந்தப் படத்தில் சிவாங்கியின் கேரக்டர் இறுதியில் தான் உருவானது என்றும் மிகவும் முக்கியமான கேரக்டர் என்று படத்தின் டைரக்டர் சிபி சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். படத்தில் எஸ்ஜே சூர்யா, காளி வெங்கட், முனீஸ்காந்த் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X