அவர் தன்னோட சூட்டிங்கை முடிச்சிட்டாரு... டான் படத்தின் அப்டேட் சொன்ன டைரக்டர்!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் லீட் கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் டான்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்து வருகிறார்.

விரைவில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று டைரக்டர் சிபி சக்ரவர்த்தி முன்னதாக அறிவித்துள்ளார். தற்போது மேலும் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனின் டாக்டர்

சிவகார்த்திகேயனின் டாக்டர்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்துள்ள டாக்டர் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. வசூல்ரீதியாகவும் இந்தப் படம் வெற்றிப் பெற்றுள்ளது. தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது.

டான் படம்

டான் படம்

இந்நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகி வரும் படம் டான். இந்தப் படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கி வருகிறார். படத்தில் கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதற்கென தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பு

சிவகார்த்திகேயன் தயாரிப்பு

இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் தயாரித்து வருகிறது. படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். இவர்களுடன் படத்தில் எஸ்ஜே சூர்யா, சிவாங்கி, ஆர்ஜே விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

விரைவில் பர்ஸ்ட் லுக்

விரைவில் பர்ஸ்ட் லுக்

படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்டு பொள்ளாச்சி, ஆக்ரா சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியிடப்படும் என்று இயக்குநர் சிபி சக்ரவர்த்தி முன்னதாக தெரிவித்துள்ளார்.

சூட்டிங்கை முடித்த எஸ்ஜே சூர்யா

சூட்டிங்கை முடித்த எஸ்ஜே சூர்யா

இதனிடையே, தற்போது அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், படத்தில் எஸ்ஜே சூர்யா இடம்பெற்றுள்ள காட்சிகள் அனைத்தையும் அவர் முடித்துக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். படத்தின் போஸ்டரை புஷ்பா, ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களின் போஸ்டரை வடிவமைத்த டியூனி ஜான் வடிவமைக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

எதிர்பார்ப்பில் டான் படம்

எதிர்பார்ப்பில் டான் படம்

சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவரது அடுத்த படமான டான் குறித்து தற்போதே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது. அட்லியின் உதவி இயக்குநர் இந்தப் படத்தை இயக்கிவரும் நிலையில் இந்தப் படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X