20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சிவகார்த்திகேயனின் ஜலபுல ஜங் பாடல் சாதனை!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்

முழுக்க முழுக்க கல்லூரி கதை களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது

அனிருத் இசையில் முதல் சிங்கிள் ஜலபுல ஜங் என்ற குத்தாட்ட பாடல் வெளியாகிறது யூட்யூபில் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

அனைவருக்கும் பிடிக்கின்ற

அனைவருக்கும் பிடிக்கின்ற

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கின்ற மிகச் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகின்றன அதேபோல சமுதாயத்திற்கு தேவையான முக்கிய கருத்துக்களை கொண்ட படங்களில் நடித்து பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்.

இயக்குனராக அறிமுகமாகிறார்

இயக்குனராக அறிமுகமாகிறார்

இந்த நிலையில் இப்பொழுது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்கரவர்த்தி டான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

முழுக்க முழுக்க கல்லூரி கதை களத்தில்

முழுக்க முழுக்க கல்லூரி கதை களத்தில்

டாக்டர் வெற்றியை தொடர்ந்து நடிகை பிரியங்கா அருள்மோகன் இதிலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டாக்டர் படத்திலேயே சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள்மோகன் கெமிஸ்ட்ரி மிக நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருந்தது. முழுக்க முழுக்க கல்லூரி கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்து வருகிறார். மேலும் சூரி, சமுத்திரக்கனி, சிவாங்கி, ஆர்ஜே விஜய் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்

முதல் சிங்கிள்

முதல் சிங்கிள் "ஜலபுல ஜங்"

கல்லூரி கலாட்டாவாக முற்றிலும் புதுமையான கதை களத்தில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களைப் போலவே இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் டான் படத்தின் முதல் சிங்கிள் "ஜலபுல ஜங்" செம குத்தாட்ட பாடலாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை

20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை

பாடலும் சிவகார்த்திகேயனின் மெர்சலான நடனமும் அனைவரையும் ஆட வைத்தது. இந்த நிலையில் ஜலபுல ஜங் யூட்யூப் தளத்தில் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X