10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த "பே" பாடல்!

சென்னை: நடிகா் சிவகார்த்திகேயன் இப்பொழுது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார்

நடிகை பிரியங்கா மோகன் டாக்டர் படத்தை தொடர்ந்து டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்

டான் இரண்டாவது சிங்கிளாக வெளியான பே பாடல் இப்பொழுது இணையதளத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.

இருவருக்கும் கெமிஸ்ட்ரி

இருவருக்கும் கெமிஸ்ட்ரி

நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் வெற்றியை தொடர்ந்து இப்பொழுது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார் இதுவரை கிராமத்து கதைகளிலும் சிட்டி பாயாகவும் கலக்கிக் கொண்டு இருந்த சிவகார்த்திகேயன் இப்போது முதன்முறையாக கல்லூரி மாணவராக நடித்து வரும் இந்த படத்தில் நடிகை பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் ஏற்கனவே டாக்டர் திரைப்படத்தில் இணைந்து நடித்திருப்பார்கள் அந்த படத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருந்தது டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை பிரியங்கா அந்த படத்தில் வெறும் நடிப்பு மட்டுமல்லாமல் காமெடியிலும் கலக்கி இருப்பார்

டான்

டான்

முழுக்க முழுக்க கலகலப்பான கல்லூரிக் கதை களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்து வருகிறார். மேலும் சூரி, ஆர் ஜே விஜய்,சிவாங்கி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். டான் படையெடுப்பு மொத்தமும் முடிந்து இப்பொழுது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இரண்டாவது சிங்கிள் பே

இரண்டாவது சிங்கிள் பே

டான் படத்திலிருந்து முதல் பாடல் ஜலபுல ஜங் வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில் அதனைத் தொடர்ந்து இரண்டாவது பாடல் பே சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இயக்குனர் விக்னேஷ் சிவன் வரிகளில் அனிருத்தின் இசையில் வெளியான இந்த பாடலை ஆதித்யா ஆர்கே பாடியுள்ளார். கேட்பதற்கு மிகவும் இனிமையான மெலோடி பாடலாக வெளியான பே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

10 மில்லியன் பார்வையாளர்களை

10 மில்லியன் பார்வையாளர்களை

இணையதளத்தில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வரும் பே பாடல் இப்பொழுது 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் முன்னணியில் உள்ளது. சிவகார்த்திகேயனும் பிரியங்கா மோகனும் க்யூட்டாக நடித்துள்ள ரொமான்டிக் பாடலாக உருவாகியுள்ள பே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இப்போது யூட்யூப் தளத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது உள்ளது. டான் வரும் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X