டான் 2-வது சிங்கிள் ரிலீஸ் அப்டேட் வெளியானது!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் இப்பொழுது டான் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்
அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து வருகிறார்
டான் படத்திலிருந்து ஏற்கனவே முதல் சிங்கிள் ஜலபுல ஜங் வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில் இப்போது 2வது சிங்கிள் குறித்த முக்கிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

காமெடிக்கு பஞ்சமிருக்காது
நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் என்றாலே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் குறிப்பாக சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் என்றால் காமெடிக்கு பஞ்சமிருக்காது. சிட்டி பாய் வில்லேஜ் பாய் என பல கதாபாத்திரங்களில் நடித்து இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கும் சிவகார்த்திகேயனின் ஒவ்வொரு படங்களும் மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது

டாக்டர் படத்தில்
மேலும் ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டி நடித்து வந்த சிவகார்த்திகேயன் கடைசியாக டாக்டர் திரைப்படத்தில் சாதுவான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியிருந்தார் சிவகார்த்திகேயனின் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவான டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் பெரிதாக பேசமாட்டார் மிகக் குறைந்த அளவில் மட்டுமே வசனங்கள் பேசி நடித்து இருப்பார் அதுவே இந்த படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆக அமைந்தது

மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக
டாக்டர் வெற்றியைத் தொடர்ந்து இப்பொழுது அடுத்ததாக அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடித்து வருகிறார். சுபாஷ்கரன் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்து வரும் இப்படத்திற்கு வழக்கம்போல அனிருத் இசையமைத்து வருகிறார். டாக்டர் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் எந்த படத்திலும் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க கல்லூரி கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் குக்வித் கோமாளி புகழ் சிவாங்கி, ஆர்ஜே விஜய்,எஸ் ஜே சூர்யா, சூரி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

2-வது சிங்கிள் "பே"
முற்றிலும் இளமை துள்ளலுடன் உருவாகியுள்ள டான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் படக்குழு இப்பொழுது 2வது சிங்கிள் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. டான் படத்திலிருந்து முதல் சிங்கிள் ஜலபுல ஜங் வெளியாகி இணையத்தில் கலக்கிக்கொண்டு உள்ளது. இந்த நிலையில் 2- வது சிங்கிள் "பே" பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அனிருத் இசையில் ஆதித்யாவின் குரலில் உருவாகியுள்ள இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். ரொமான்டிக் பாடலாக இப்பாடல் உருவாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











