சிவகார்த்திகேயன் என்னம்மா டான்ஸ் ஆடுறாரு.. வேறலெவல் ‘பிரைவேட் பார்ட்டி’ இது.. ஜோனிடா ஜொலிக்கிறாங்க!
சென்னை: சிவகார்த்திகேயனின் டான் படத்தின் மூன்றாவது பாடலான பிரைவேட் பார்ட்டி பாடல் வெளியாகி உள்ளது.
லைகா தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி நடித்துள்ள டான் படம் வரும் மே 13ம் தேதி வெளியாகிறது.
அனிருத் இசையில் ஏற்கனவே வெளியான ஜலபுல ஜங் மற்றும் பே பாடல்கள் ஹிட் அடித்த நிலையில், அடுத்த ஹிட் பாடலாக பிரைவேட் பார்ட்டி வெளியாகி உள்ளது.
பிரைவேட் பார்ட்டி ரிலீஸ்
அனிருத் இசையமைத்து பாடியுள்ள இந்த பிரைவேட் பார்ட்டி பாடலுக்கும் சிவகார்த்திகேயன் தான் பாடல் வரிகளை எழுதி உள்ளார். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் ஃபேன்ஸி டிரெஸ் அணிந்து செட்டுக்குள் ஆட, அனிருத்தும் ஜோனிடா காந்தியும் இந்த பாடலை பாடி உள்ளனர். நேற்று பாடலின் டீசர் வெளியான நிலையில், தற்போது முழு லிரிக் வீடியோவும் வெளியாகி உள்ளது.

செம ஜோடி
டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் இணைந்து நடித்து செம ஜோடியென ரசிகர்கள் மத்தியில் பெயர் வாங்கினர். அதே ஹிட் ஜோடி டான் படத்திலும் இணைந்து நடித்துள்ளது. கீர்த்தி சுரேஷுக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு பிரியங்கா மோகன் பக்காவான ஜோடியாக மாறியுள்ளார்.

யாரை பார்க்குறதுன்னு தெரியலையே
சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் ஒரு பக்கம் ஜோடி போட்டு ஆடுகின்றனர் என்றால், மறுபக்கம் அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி ஜோடி போட்டு தனியாக ஒரு பிரைவேட் பார்ட்டியை நடத்தி வருகின்றனர். பிரியங்கா மோகனை விட ஜோனிடாவே சில இடங்களில் பார்க்க நல்லா இருக்காரு என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

நன்றியெல்லாம் எதுக்கு
அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகள் எழுதியுள்ள நிலையில், அதை குறிப்பிட்டு அனிருத் நன்றி தெரிவித்திருந்தார். உடனடியாக அந்த ட்வீட்டுக்கு பதில் போட்டுள்ள சிவகார்த்திகேயன், சார் நன்றியெல்லாம் சொல்லக் கூடாது.. நீங்களும் உங்க மியூசிக்கும் தான் என்னை எழுதவே வைக்குது என பாராட்டி உள்ளார்.


Click it and Unblock the Notifications











