"டான்" படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது!
சென்னை: டாக்டர், அயலான் படங்களை தொடர்ந்து இப்பொழுது சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கோலமாவு கோகிலா படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் இயக்கியிருக்கும் டாக்டர் படம் வரும் மார்ச் மாதம் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
டான் படத்தை பற்றிய அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி பல பிரபலங்கள் இதில் நடித்த ஒப்பந்தமாகி வர இன்று இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

நம்ம வீட்டு பிள்ளை
சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் அதேபோல கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் படம் முழுவதும் காமெடியில் நிறைந்திருக்கும் என்று அனைத்து வயதினரும் விரும்பி பார்க்கக்கூடிய வகையில் கார்த்திகேயனின் ஒவ்வொரு படங்களும் இருந்து வர கடைசியாக வெளியான நம்ம வீட்டு பிள்ளை குடும்பங்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.

சூரி சிவகார்த்திகேயன்
நடிகர் சூரி சிவகார்த்திகேயன் இணையும் திரைப்படங்கள் என்றாலே அதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை என இவர்கள் இருவரும் இணையும் படங்களில் காமெடிக்கு பஞ்சமே இல்லாமல் இருப்பதால் ரசிகர்கள் இந்த கூட்டணியை காண விரும்புகின்றனர்.

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி
நெல்சன் இயக்கத்தில் டாக்டர் மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்ததோடு டாக்டர் படத்தின் டப்பிங் வேலைகளையும் முடித்துவிட்டு இப்பொழுது அடுத்த படத்தின் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளார் சிவகார்த்திகேயன். இயக்குனர் அட்லி இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

டான்
காலேஜ் கதையை மையப்படுத்தி உருவாகும் டான் படத்தில் நடிகை ப்ரியங்கா மோகன் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் சூரி, சிவாங்கி, ஆர் ஜே விஜய், எஸ் ஜே சூர்யா, காளி வெங்கட், முனிஸ்காந்த், பால சரவணன், சமுத்திரக்கனி என பல நட்சத்திரங்கள் இதில் நடிக்க கோயம்புத்தூரில் உள்ள கல்லூரி ஒன்றில் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது இந்த புகைப்படங்களை சிவகார்த்திகேயன் இப்பொழுது பகிர்ந்துள்ளார்.
Recommended Video

கமர்சியல் வெற்றியாக
டாக்டர் படத்திற்கு பிறகு மீண்டும் பிரியா அருள் மோகனுடன் ஜோடி, சூரியின் கூட்டணியில் மீண்டும் காமெடி காம்போ என டான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்க சிவகார்த்திகேயனுக்கு இந்த படமும் மற்றுமொரு கமர்சியல் வெற்றியாக இருக்கும் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











