அவன் ஆர்யா, சூர்யாவையே ஓவரா கலாய்ப்பான் நீ எல்லாம் எம்மாத்திரம்: கணவரிடம் கூறிய தேவயானி
சென்னை: அவன் ஆர்யா, சூர்யாவையே அந்த கலாய் கலாய்ப்பான் நீ எல்லாம் அவனுக்கு அல்வா மாதிரி என்று நடிகை தேவயானி தனது கணவர் ராஜகுமாரனிடம் தெரிவித்ததாக நடிகர் சந்தானம் கூறினார்.
நடிகர் சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் பவர் ஸ்டாரை ஓட்டு ஓட்டு என்று ஓட்டி நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைத்தார். இந்நிலையில் அவர் தான் ஹீரோவாக நடிக்கும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்திலும் அதே பாணியை கையாள்கிறார்.
இந்த முறை சிக்கியவது பவர் அல்ல சோலார் ஸ்டார்.

தேவயானி
சந்தானம் தனது கணவர் ராஜகுமாரனை வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடிக்க அழைத்த விஷயம் தேவயானிக்கு தெரிய வந்தது. இதை கேட்ட அவர் கலங்கிப் போய்விட்டாராம்.

ரகிசயமாக
ராஜகுமாரன் வீட்டில் சொல்லாமல் படத்தில் நடிக்க வந்துவிட்டாராம். காரணம் தேவயானிக்கு அவர் சந்தானம் படத்தில் நடிப்பது பிடிக்கவில்லையாம். இதை ராஜகுமாரனே சந்தானத்திடம் தெரிவித்துள்ளார்.

கலாய்ப்பான்
அந்த சந்தானம் ஆர்யா, சூர்யாவையே ஓவராக கலாய்ப்பான். நீ எல்லாம் அவனுக்கு அல்வா துண்டு மாதிரி. தயவு செய்து அவன் படத்தில் நடிக்காதே. என்னால் வெளியே தலையை காட்ட முடியாது என்று தேவயானி ராஜகுமாரனிடம் தெரிவித்ததாக சந்தானம் கூறினார்.

லைட்டா
உங்களை ஓவராக கலாய்க்க மாட்டேன். கொஞ்சமாக கலாய்ச்சுக்கிறேன் என்று சந்தானம் ராஜகுமாரனிடம் தெரிவித்துள்ளார். படத்தில் ஒரு காட்சியில் பவர் ஸ்டாரும் வருகிறாராம்.

ஓபனிங் பாடல்
படத்தின் ஓபனிங் பாடலில் சந்தானத்துடன் குழந்தைகள் ஆடுகிறதாம். இந்த பாடலில் சந்தானத்தின் மூன்று குழந்தைகளும் ஆடுகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











