twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகைகள் தேவை... போலி விளம்பரங்களை நம்பி ஏமாறவேண்டாம்

    |

    சென்னை: இணையதளங்களில் வெளியாகும் போலியான விளம்பரங்களை பெண்கள் நம்பி ஏமாறவேண்டாம். ஒருவேளை உங்களுக்கு நடிக்க ஆர்வமாக இருந்தால், உங்களுடன் ஒரு ஆண் நண்பரையோ அல்லது உங்கள் பெற்றோரையோ உடன் அழைத்துச் செல்லுங்கள். இல்லாவிட்டால், உங்களை சீரழித்து விடுவார்கள் இந்த சமூக விரோதிகள்.

    இன்று நம் கைகளில் இருக்கும் ஃபோனை வைத்து எந்த ஒரு பெண்மணியையும் மடக்கி விடலாம். அதிலும் டிக்டாக் செயலி வந்த பிறகு ஒரு சில சமூக விரோதிகள் சினிமாவிற்கும் வெப் சீரிஸுக்கும் ஷார்ட் ஃபிலிமுக்கும் நடிகைகள் தேவை என்று சமூக வலைதளங்களில் போலியான விளம்பரங்களை வெளியிடுகின்றனர். அந்த விளம்பரங்களை பார்த்து தொடர்பு கொள்ளும் பெண்களின் ஃபோட்டோக்கள் முதல் அனைத்து விபரங்களையும் சேகரிக்கிறார்கள்.

    Dont be fooled by fake advertisements on websites

    அதிலும் சில பெண்கள் சினிமா மீது உள்ள அதீத ஆர்வத்தால் மோசடிப் பேர்வழிகள் என்ன கேட்டாலும் தலையாட்டி பொம்மை போல் சரி சரி என்று தலையை ஆட்டுகிறார்கள். இன்னும் ஒரு சில சமூக விரோதிகள், நான் பெரிய இயக்குனரின் உதவியாளர். நான் என்ன சொன்னாலும் இயக்குனர் ஒ,கே சொல்லுவார் என்று கதையளப்பார்கள்.

    அதோடு, நானே ஒரு படத்தை உடனடியாக இயக்க தயாராக உள்ளதாகவும், அதற்கு உங்களைப்போன்ற நல்ல குடும்பப் பாங்கான நடிகையை தேடி கொண்டிருப்பதாகவும், நீங்கள் தான் அந்தக் கதைக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறீர்கள். ஒரு ஃபோட்டோ சூட்டுக்கு வர முடியுமா, என அவர்கள் நம்பும் படியாக பேசுகிறார்கள்.

    ஒரு சின்ன இடத்தில் ஃபோட்டோ ஷூட் நடத்தி, பிறகு நீங்கள் செலக்டாகி இருக்கிறீர்கள் என அவரிடம் நைஸாக பேசுகிறார்கள். ஆனால், நீங்கள் நான் சொல்லும் நண்பர்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டால் நீங்கள் தான் ஹீரோயின் என அடித்துச் சொல்வார்கள்.

    எப்படியாவது நடிகையாக வேண்டும் என்ற நப்பாசையில், இன்றைக்கு இதெல்லாம் சகஜம் என தன்னையே சமாதானம் செய்து கொண்டு, அவர்கள் அதற்கும் ஓ.கே சொல்லி விடுவார்கள். பிறகு தான் தெரிகிறது நான் ஹீரோயினுக்கு தேர்வாகவில்லை. விபச்சாரம் செய்வதற்கு தேர்வாகி உள்ளேன் என்று.

    பின்பு, அவர்கள் அதை விட்டு வெளியே வரமுடியாமல், தனக்கு நேர்ந்த அவலத்தை வெளியிலும் சொல்ல முடியாமல் கடைசியில் மும்பையிலும் கொல்கத்தாவிலும் செட்டில் ஆகிவிடுகிறார்கள். இதிலும் சில உண்மையான நபர்கள் உள்ளனர்.

    சமூக வலைதளங்களில் போலி விளம்பரங்களை நம்பாதீர்கள். ஒருவேளை உங்களுக்கு நடிக்க ஆர்வமாக இருந்தால், உங்களுடன் ஒரு ஆண் நண்பரையோ அல்லது உங்கள் பெற்றோரையோ உடன் அழைத்துச் செல்லுங்கள். இல்லாவிட்டால், உங்களை சீரழித்து விடுவார்கள் இந்த சமூக விரோதிகள்.

    English summary
    Women should not be fooled by fake advertisements on websites. If you're interested in acting, take a boyfriend with you or your parents. Otherwise, they will degrade you.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X