எந்த வதந்தியையும் நம்பாதீங்க.. போயிட்டு சூப்பரா திரும்பி வருவேன்.. டி ராஜேந்தர் பேட்டி!

சென்னை: மேல் சிகிச்சைக்காக நடிகர் டி.. ராஜேந்தர் சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார்.

விமான நிலையத்திற்குள் செல்வதற்கு முன்பாக சற்று முன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த டி. ராஜேந்தர் தன்னைப் பற்றி உலாவும் எந்தவொரு தவறான வதந்தியையும் நம்ப வேண்டாம் என்றும் தான் நலமுடன் சிகிச்சை முடிந்து மீண்டும் வந்து உங்களை சந்திப்பேன் எனக் கூறியுள்ளார்.

நடிகர் சிம்பு வெளிநாட்டில் தனது அப்பாவின் சிகிச்சைக்கான பண்களை மேற்கொள்ள 10 நாட்களுக்கு முன்பாகவே அமெரிக்கா சென்றதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னைப் பற்றிய வதந்தி

தன்னைப் பற்றிய வதந்தி

சென்னை விமான நிலையத்திற்கு வந்த டி. ராஜேந்தர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "நான் இன்றைக்குத்தான் போகிறேன் அமெரிக்கா ஆனால் எபோதோ போய்விட்டார். எங்கேயோ போய்விட்டார் என்று எழுதினார்கள் சேதி. பலர் செய்த பிரார்த்தனை அவர்கள் செய்த ஆராதனை அதனால் இங்கு நிற்கிறேன்." எனக் கூறினார்.

அத்தனை பேருக்கும் நன்றி

அத்தனை பேருக்கும் நன்றி

"எனக்காக பிரார்த்தனை செய்த என்னுடைய ரசிகர்கள், சிம்புவின் ரசிகர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு உதவி செய்த பச்சமுத்து வேந்தர், கம்ல்ஹாசன் என்னை சந்தித்துவிட்டுச் சென்றார், வெந்து தணிந்தது காடு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. நான் நல்லா இருக்கணும் என்று எனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள், அபிமானிகள் அனைவருக்கும் என்ன கைம்மாறு செய்யப்போகிறேனோ தெரியாது." என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

ராமசந்திரா மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், ஊழியர்கள் என அனைவருமே அன்புடன் என்னை கவனித்துக் கொண்டனர். முதலமைச்சர் ஸ்டாலின், எங்க அண்ணி துர்கா ஸ்டாலின் என அனைவருமே என்னை சந்தித்து நலம் விசாரிப்பார்கள் என்றெல்லாம் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி எனக் கூறினார்.

எதையும் நம்பாதீங்க

எதையும் நம்பாதீங்க

பிரபலங்கள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு சென்றாலே, அவர்கள் மறைந்து விட்டதாக சில விஷமிகள் வாட்ஸப்பில் பகிர்ந்து வருகின்றனர். அதையெல்லாம் பார்த்து ரொம்பவே மனம் நொந்து போன நிலையில், தான், "என் சொந்தமெல்லாம் என் கூடவே இருந்தது, அதையெல்லாம் மீறி என் மீது அன்பு காட்டிய ரசிகர்கள், உலக மக்கள் ஈழத்து மக்கள் இருக்கும்போது என்னைப்பற்றி வரும் எந்த வதந்தியும் நம்பாதீர்கள்." என அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.

தாடி வச்சிருக்கேன் மூடி வச்சதில்லை

தாடி வச்சிருக்கேன் மூடி வச்சதில்லை

"நான் முகத்தில் தான் வாச்சிருக்கேன் தாடி, என் வாழ்க்கையில் எதையும் மறைத்ததில்லை மூடி" சீக்கிரமே சிகிச்சை முடித்து விட்டு சென்னை திரும்பி உங்களை எல்லாம் மீண்டும் சந்திப்பேன் எனக் கூறிவிட்டு விமான நிலையத்திற்குள் சென்றார் டி. ராஜேந்தர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X