அரசியலுக்கு வரும் ரஜினி, கமலை நம்ப வேண்டாம் என்கிறாரா சத்யராஜ்?
Recommended Video

சென்னை: ரஜினி, கமல் அரசியலுக்கு வரும் நிலையில் சத்யராஜ் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ரஜினிகாந்தும், கமல் ஹாஸனும் தனிக்கட்சி துவங்கும் வேலையில் தீவிரமாக உள்ளனர். கமல் தனது கட்சியின் பெயரை நாளை மறுநாள் அறிவிக்க உள்ளார்.
இந்நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ் கூறியதாவது,

அரசியல்
நடிகர்கள் அரசியலுக்கு வருவது அன்றாட செய்தியாகிவிட்டது. அரசியலுக்கு வருவதால் நடிகர்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. அவர்கள் தேவைக்கு அதிகமாகவே சம்பாதித்துள்ளனர்.

நான்
நானே மூன்று தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்துள்ளேன். பிரபல நடிகர்கள் என்பதால் அவர்களுக்கு அனைத்தும் தெரியும் என்று மட்டும் நம்பிவிட வேண்டாம்.

தோல்வி
நடிகர்கள் அரசியலுக்கு வந்து தோல்வி அடைந்தால் அது அவர்களுக்கு பெரிய விஷயமே இல்லை. அவர்கள் வென்றால் உங்களின் நிலை என்ன ஆகும் என்று மட்டும் யோசித்து பாருங்கள். நடிகர்கள் அரசியலில் தோற்க வேண்டும் என்றார் சத்யராஜ்.

கருத்து
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து மக்கள் ஏற்கனவே வேறு மாதிரியாக விமர்சித்து வரும் நிலையில் சத்யராஜ் இப்படி பேசியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











