அது என்ன டாடி மம்மி.. சீனியர் நடிகையின் ரிக்வஸ்ட் !

சென்னை : தமிழ் திரைத்துறை வரலாற்றில் தவிர்க்க முடியாத சீனியர் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஸ்ரீபிரியா.

முருகன் காட்டிய வழி திரைப்படத்தின் மூலம் திரைப்படங்களில் அறிமுகமான ஸ்ரீபிரியா அதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் கமல்ஹாசன் சிவாஜி கணேசன் ஜெய் ஷங்கர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து இயக்குனராக வெற்றி பெற்ற ஸ்ரீபிரியா இப்பொழுது உள்ள தலைமுறையினருக்கு ரிக்வஸ்ட் ஒன்றை வைத்துள்ளார்.

புகழ்பெற்ற முன்னணி நடிகை

புகழ்பெற்ற முன்னணி நடிகை

கே.பாலச்சந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை, ஆட்டுக்கார அலமேலு, ஆடு புலி ஆட்டம், பில்லா, வாழ்வே மாயம், அன்னை ஓர் ஆலயம், பைரவி, அவள் அப்படித்தான் என தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட எண்ணற்ற வெற்றித் திரைப்படங்களில் தமிழில் நடித்து புகழ்பெற்ற முன்னணி நடிகையாக 70 மற்றும் 80 களில் வலம் வந்த ஸ்ரீபிரியா கன்னடம், ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார்.

இயக்கியும் தயாரித்தும்

இயக்கியும் தயாரித்தும்

கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் ஸ்ரீபிரியா பல படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார்.

தெலுங்கில் இயக்கி

தெலுங்கில் இயக்கி

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சீனியர் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஸ்ரீபிரியா மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற "த்ரிஷ்யம்" திரைப்படத்தை தெலுங்கில் இயக்கி இயக்குனராகவும் வெற்றி நடை போட்டு வருகிறார்.

காரசாரமாக பேசப்பட்டு

காரசாரமாக பேசப்பட்டு

பல முகங்களை கொண்டுள்ள ஸ்ரீபிரியா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், அடிக்கடி பதிவை போட்டு தாக்கி காரசாரமாக பேசப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

 டாடி மம்மி

டாடி மம்மி

காலப்போக்கில் அனைத்தும் இயந்திரமயமாகி போகும் சூழலில் நெருக்கமான சில உறவுகளும் இதில் அடங்கியுள்ளன. காலத்திற்கு தகுந்தாற்போல் மாறி வரும் இந்த உலகில் பலரும் பிள்ளைகள் அவர்களது பெற்றோர்களை டாடி மம்மி என அழைப்பதை வழக்கமாகவும் ஸ்டைலாகவும் கொண்டுள்ளனர்.

அம்மா அப்பா

அம்மா அப்பா

தற்போதுள்ள இளம் தலைமுறையினருக்கும் நடிகை ஸ்ரீபிரியா கூறியிருப்பதாவது " எம்மொழியிலும் பேசலாம், எவ்வழி கல்வியிலும் பயிலலாம், இருப்பினும் பெற்றோரை தாய் மொழியில் அழைப்பது தானே அழகு? "Daddy mummy" தான் இன்றைய பிள்ளைகளுக்கு பரிச்சயம்! அம்மா என்று அழைத்து பாருங்கள்... மனம் நிறையும்! அப்பா என்று கூப்பிட்டுப்பாருங்கள்.. மன பாரம் குறையும்"தற்போதுள்ள இளம் தலைமுறையினருக்கும் நடிகை ஸ்ரீபிரியா கூறியிருப்பதாவது " எம்மொழியிலும் பேசலாம், எவ்வழி கல்வியிலும் பயிலலாம், இருப்பினும் பெற்றோரை தாய் மொழியில் அழைப்பது தானே அழகு? "Daddy mummy" தான் இன்றைய பிள்ளைகளுக்கு பரிச்சயம்! அம்மா என்று அழைத்து பாருங்கள்... மனம் நிறையும்! அப்பா என்று கூப்பிட்டுப்பாருங்கள்.. மன பாரம் குறையும்"

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X