»   »  அதை நிர்வாணம், டாப்லெஸ் போட்டோன்னு சொல்லாதீங்க: நடிகரின் மகள் குமுறல்

அதை நிர்வாணம், டாப்லெஸ் போட்டோன்னு சொல்லாதீங்க: நடிகரின் மகள் குமுறல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தயவு செய்து அந்த புகைப்படங்களை நிர்வாண மற்றும் டாப்லெஸ் புகைப்படங்கள் என்று கூறாதீர்கள் என பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராபின் மகள் கிருஷ்ணா கேட்டுக் கொண்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராபின் மகள் கிருஷ்ணா(22) அண்மையில் டாப்லெஸ்ஸாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதை வெளியிட்ட கையோடு மீண்டும் மேலாடையின்றி படுத்தபடி புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

Don’t call them topless pics: Krishna Shroff

இந்நிலையில் அந்த புகைப்படங்கள் குறித்து அவர் கூறுகையில்,

டாப்லெஸ்

நான் வெளியிட்ட புகைப்படங்கள் நிர்வாணம் மற்றும் டாப்லெஸ் புகைப்படங்கள் அல்ல. அதை நிர்வாணம், டாப்லெஸ் என்று மக்கள் கூறுவதை கேட்டு அலுத்துவிட்டேன்.

அழகு

நான் அந்த புகைப்படங்களில் அழகாக இருந்தேன் என நினைத்தேன். அதனால் தான் அவற்றை எனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்டேன். அவற்றை கண்டுபிடிக்க இணையதளங்களுக்கு ஒரு மாதம் ஆனது.

ஆமீர் கான்

நான் சினிமா படம் இயக்க ஆசைப்படுகிறேன் என்றும் இது தொடர்பாக ஆமீர் கானின் தயாரிப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டேன் என்று கூறுவதில் உண்மை இல்லை. நான் பள்ளி குழந்தைகளுக்கு கூடைப்பந்து விளையாட பயிற்சி அளித்து வருகிறேன்.

நடிப்பு

என் தந்தையும், சகோதரரும் சினிமா துறையில் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். ஆனால் அவர்கள் இந்த துறையில் இருப்பதால் நானும் அதே துறைக்கு வருவேன் என்று அர்த்தம் இல்லை என்றார் கிருஷ்ணா.

English summary
Bollywood actor Jackie Shroff's daughter Krishna said that her recent pictures in instagram are neither nude nor topless.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil