twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பேய் அறைஞ்ச மாதிரியே இருக்கும் ரியோ.. ட்ரோல்களை கண்டு துவண்டு விடாதே என பாடம் நடத்திய கமல்!

    |

    சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி தருணங்களில் ஹேப்பியாக இல்லாமல், அந்த வீட்டிலேயே ரியோ மட்டுமே ரொம்பவே அப்செட்டான மனநிலையில் உள்ளது தெளிவாக தெரிகிறது.

    அர்ச்சனா மற்றும் நிஷாவை மீண்டும் சந்தித்த பிறகே ஏதோ ஒரு குற்ற உணர்வில் ரியோ இப்படி மாறியுள்ளார்.

    சமூக வலைதளங்களில் குவியும் ட்ரோல்களுக்கும் மீம்களுக்கும் அஞ்ச தேவையே இல்லை என கமல் ரியோவுக்கு பாடம் நடத்தி தேற்றினார்.

    பிளஸ் மைனஸ்

    பிளஸ் மைனஸ்

    பிரபலம் என ஆனாலே பிளஸ் மைனஸ் என இரண்டுமே வந்துவிடும். நடிகர் விஜய்யின் படம் தல ரசிகர்களுக்கு பிடிக்காது. நடிகர் அஜித்தின் படத்தை தளபதி ரசிகர்கள் ட்ரோல் செய்வார்கள். அப்படித்தான், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருக்கும் 16 போட்டியாளர்களையும் பாராட்டவும் தூற்றவும் ஒரு கூட்டம் எப்போதுமே இருக்கும்.

    நல்லதே செய்தாலும்

    நல்லதே செய்தாலும்

    நீ பிக் பாஸ் வீட்டில் நல்லவனாகவே இருந்தாலும் உன்னை பழம் என்றும் அம்பி என்றும் கிண்டல் பண்ணுவார்கள். ரவுடித்தனம் பண்ணினாலும், கெத்து என்று போற்றவும் செய்வார்கள். சமூகத்தில் எல்லாருக்குமே ஒருத்தரை பிடிக்க வேண்டும் என்பதும் ஒரு குணம் மட்டுமே உயர்ந்தது என்பதுவும் கிடையாது.

    அதிக ஓட்டுக்கள்

    அதிக ஓட்டுக்கள்

    அதிக ஓட்டுக்களுடன் ஆரி முதல் ஆளாக சேவ் ஆன அதே நேரத்தில் தான் அடுத்ததாக பாலாவும் சேவ் ஆகிறார். ஆரிக்கு அடுத்த இடத்தில் பாலா சேவ் செய்யப்படுகிறார் என்றால், பாலாவுக்கும் ரசிகர்கள் உள்ளனர் என்று தான் அர்த்தம். ஆரி பிஆர் டீம் வச்சு வென்றால், பாலாவின் வெற்றி, ரியோவின் வெற்றி, ரம்யாவின் வெற்றியும் கேள்விக் குறியாகவே ஆகிவிடும்.

    குற்ற உணர்வில் ரியோ

    குற்ற உணர்வில் ரியோ

    இப்படி சண்டை போடாதீங்க நாம நேஷனல் டெலிவிஷன்ல இருக்கோம் என ரியோ நல்ல எண்ணத்திற்காக சொன்னதையே பங்கமாக கலாய்த்து ட்ரோல் செய்தனர். மனதில் பட்டதை பேசினால் பிரச்சனை ஆகிவிடுமோ என்பதாலே அவர் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு இந்த 100 நாட்களும் கடந்துள்ளார். நிஷாவும், அர்ச்சனாவும் வெளியேற தான் காரணம் ஆகிவிட்டோமே என்கிற குற்ற உணர்வால் தான் ரியோ அப்படி அப்செட்டாக உள்ளார்.

    ட்ரோலை கண்டுக்காதீங்க

    ட்ரோலை கண்டுக்காதீங்க

    ரியோவின் முகத்தை அப்படி பார்க்க பிடிக்காத கமல், அவரை மீண்டும் பழைய ரியோவாக மாற்றும் முயற்சியில் ரொம்பவே மெனக்கெட்டு சனிக்கிழமை நிகழ்ச்சி மொத்தமும் போயிடுச்சு. சினிமா படத்தை எல்லாம் விமர்சித்து கிழித்துத் தொங்கவிடுகிறார்கள், அடுத்து என்ன வீட்டுக்கா போய்விடுகிறோம் அடுத்த படத்தை நல்லா கொடுக்க உழைக்கலையா என கமல் சொன்ன உதாரணம் ரியோவுக்கு உற்சாகத்தை கொடுத்தது.

    முடியை வெட்டிட்டாங்க

    முடியை வெட்டிட்டாங்க

    ரியோவின் முகத்தை விட அவரது முடி ரொம்பவே அவரை கொடுமையாக காட்டியது. கிராண்ட் ஃபினாலேவுக்கும் இப்படியே இருந்தா நல்லாவா இருக்கும் என நினைத்து, அனைத்து போட்டியாளர்களுக்கும் சிகை அலங்காரம், மேக்கப் என டோட்டலாக பார்க்கும் படி மாற்றியது சிறப்பு.

    English summary
    Don’t care about trolls, Kamal Haasan advice to Rio Raj and other housemates. And boost up all finalist to the Grand Finale.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X