»   »  அடிக்கடி படம் இயக்காதீங்க மாப்பிள்ளை: தனுஷுக்கு ரஜினி அறிவுரை

அடிக்கடி படம் இயக்காதீங்க மாப்பிள்ளை: தனுஷுக்கு ரஜினி அறிவுரை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்தடுத்து படம் இயக்காதீங்க மாப்பிள்ளை என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனுஷிடம் கூறியுள்ளாராம்.

நடிகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகராக இருந்து வரும் தனுஷ் பவர் பாண்டி சாரி ப. பாண்டி படம் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். தனது அப்பாவின் முதல் பட ஹீரோவான ராஜ் கிரணையே தனது முதல் ஹீரோவாக ஆக்கியுள்ளார்.


படத்தில் ஸ்டண்ட் பார்ட்டியாக வரும் ராஜ் கிரணின் பெயர் தான் பாண்டி.


ரஜினி

ரஜினி

பவர் பாண்டி படத்தை விறு விறுவென இயக்கி முடித்துள்ளார் தனுஷ். படம் வரும் 14ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அவர் தனது படத்தை மாமனார் ரஜினிகாந்துக்கு போட்டுக் காட்டியுள்ளார்.


பாண்டி

பாண்டி

ப. பாண்டி படத்தை பார்த்த ரஜினிகாந்த் அசந்துவிட்டாராம். 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தங்களை பிள்ளைகள், உறவினர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று இருந்துவிடாமல் தங்களுக்கு என பணம் சேமிக்க வேண்டும் என்று படத்தில் கருத்து தெரிவித்துள்ளார் தனுஷ்.


இம்பிரஸ்ட்

இம்பிரஸ்ட்

படத்தை பார்த்த ரஜினி இயக்குனர் தனுஷின் திறமையால் இம்பிரஸ் ஆகியுள்ளார். இந்த ஒரு படம் போதும் மாப்ளே அடுத்த 10 வருஷத்துக்கு அனைவரும் உங்களை பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள் என்றாராம் ரஜினி.


இயக்கம்

இயக்கம்

தனுஷ் ஒரு படம் இயக்கினாலும் அது சரித்திரத்தில் இடம் பெற்ற படம் என்று வரலாறு உங்களை பற்றி பேசும். அதனால் அடுத்தடுத்து படம் இயக்கி அந்த படத்தின் மதிப்பை இழக்க வேண்டாம் என ரஜினி தனுஷுக்கு அறிவுரை வழங்கியுள்ளாராம்.


English summary
Super star Rajinikanth watched Dhanush's directorial debut Pa. Paandi and is impressed by his son-in-law's talent. He even advised Dhanush not to direct movies frequently.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil