கோபி, சுதாகர் பரிதாபங்கள்.. அய்யோ ஜாம்பி மாதிரி மொக்கை படம் பண்ணிடாதீங்க!
சென்னை: யூடியூப் சேனல் பிளாக்ஷிப்பை தொடர்ந்து பரிதாபங்கள் சேனலும் புதிய படத்தை தொடங்கியுள்ளது.
பரிதாபங்கள் கோபி, சுதாகர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு ஹே மணி கம் டுடே கோ டுமாரோ யா என மிக நீண்ட தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய க்ரவுட் ஃபண்டிங் படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 6.3 கோடி ரூபாய்.

எத்தனை தயாரிப்பாளர்கள்
யூடியூபில் கலக்கி வரும் பரிதாபங்கள் கோபி, சுதாகர் நடிப்பில் முழு நீள காமெடி படமாக உருவாகவுள்ள ஹே மணி கம் டுடே கோ டுமாரோ யா படத்திற்கு 25 ஆயிரத்திற்கும் மேலான நபர்கள் பணம் போட்டுள்ளனர். க்ரவுட் ஃபண்டிங் முறையில் தங்களது யூடியூப் சேனலின் சப்ஸ்க்ரைபர்களையே தயாரிப்பாளராக மாற்றி கோபி, சுதாகர் படம் பண்ண தொடங்கியுள்ளனர்.

ஆர்.ஜே.விக்னேஷ் கலாய்
கோபி, சுதாகரின் படத்துவக்க விழா அண்மையில் பரிதாபங்கள் சேனலில் லைவ்வாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை பிளாக்ஷிப்பை சேர்ந்த ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் தொகுத்து வழங்கினார். அப்போது பேசிய அவர், படம் பண்ணுகிறோம் என்றதும் இருவரும் வாயே திறக்கவில்லை. இப்படி அமைதி புள்ளைங்களா மாறிட்டீங்களே என்கிற தொனியில் தொடர்ந்து கலாய்த்து பேசி நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார்.

ஜாம்பி மாறி படம் பண்ணாதீங்க
நேற்று நடந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் அதிக பணம் போட்ட 100 தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவர், கோபி, சுதாகருக்கு வாழ்த்து சொல்லி விட்டு, பின்னர், ஜாம்பி படம் மாதிரி தயவு செய்து படம் பண்ணாதீங்க, தியேட்டரில் பார்க்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு படு மொக்கை என ஓபன்னாக நோஸ் கட் செய்தார்.

இலியானா
படத்தின் நாயகி நயன்தாராவா, தமன்னாவா என கேட்ட ஒரு தயாரிப்பாளருக்கு இலியானா டி க்ரூஸிடம் பேசிகிட்டு இருக்கோம் என பரிதாபங்கள் கோபி தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் கவுன்ட்டர் கொடுத்தார்.
தயாரிப்பாளர்களுக்கான டைட்டிலா?
ஹே மணி கம் டுடே கோ டுமாரோ யா என்ற டைட்டிலை பார்த்த தயாரிப்பாளர்களில் ஒருவர், இது என்ன தயாரிப்பாளர்களுக்கான டைடிலா என்ற படி கலாய்த்தார். அதற்கு கோபி, சுதாகர் படம் நிச்சயம் அனைவரையும் சிரிக்க வைக்கும் என நம்பிக்கை கொடுத்தனர்.


Click it and Unblock the Notifications











